TNPSC Group 1 Preliminary Exam 2011
video link 1 :- https://youtu.be/h9bpI2YlfTI
video link 2 :- https://youtu.be/7Bv3iPUP45I
1.பட்டியல் பொருத்துக:
உப்பு சத்தியாகிரகம் - வேதாரண்யம்
தேவதாசி ஒழிப்பு போராட்டம் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
நீல் சிலை சத்தியாகிரகம் - சோமயாஜூலு
இந்து - கஸ்தூரிரங்க ஐய்யங்கார்
2.தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்?
ஹைதரபாத்.
3.2010ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எந்த தொகுதியில் அதிக வாக்குகள் பதிவாகின?
பென்னாகரம்.
4.2010 ஆம் ஆண்டு சூலை மாதம் நடைபெற்ற உலக தமிழ் செம்மொழி மாநாடு, உலக தமிழ் மாநாடுகளின் வரிசையில்?
ஒன்பதாவது மாநாடு.
5.இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு ( Article ) கிராம பஞ்சாயத்துக்களை " அமைத்துக்கொள்ள வகை செய்துள்ளது?
பிரிவு 243.
6.கீழ்கண்டவற்றுள் எது பொருத்தமான்து இல்லை ?
மேதா பட்கர் - ஐ.நா.வின் இந்தியப் பிரதிநிதி.
7.யாரால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது?
ராபர்ட் கிளைவ்.
8.f(x) = 1𝑥2 மற்றும் g(x) = 𝑒−9𝑥 எனில், (fog ) (x ) என்பது.
1𝑒−18𝑥.
9.பொது விநியோக முறையின் கீழ், ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் மாநிலம்?
தமிழ் நாடு.
10.தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் சட்டம் 100 நாட்கள் வேலை
கொடுப்பதற்காக ___________ ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.?
2006.
11.மத்திய அரசு கொடுக்கும் நிதியுதவியின் நோக்கம்?
மாநிலங்களின் நிதிவளத்தினைப் பெருக்க.
12.தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது எந்த ஆண்டு?
1994.
13.இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே சமீப காலமாக ஏற்பட்ட பதட்டம் பற்றிய செய்தித்தாள்கள் விவரங்கள்?
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டுதல்
அருணாச்சலப் பிரதேசத்திற்கு பிரதம அமைச்சர் விஜயம்
ஆசிய வங்கியில் இந்தியாவிற்கு கடன் வழங்க சீனாவின் தடை முயற்சி.
14.21-ம் நூற்றாண்டில் நீண்ட நேரம் சூரிய கிரகணம் நிகழ்ந்த தேதி?
ஜூலை 22, 2009.
15.குத்புதீன் ஐபக் _______ இன் அடிமை ஆவார்.?
முகமது கோரி.
16.கால வரிசைப்படுத்துக:
கிலாபாத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறுஇயக்கம்.
17.ஐம்பது எண்களின் திட்ட விலக்கம் 6:5 ஆகும். ஒவ்வொரு எண்ணின் மதிப்பிலும் 5-ஐக் கூட்டினால், திட்ட விலக்கம்?
15.
18.மாலிப்டீனம் என்ற மண்ணில் உள்ள நுண் ஊட்டப் பொருளின் குறைபாட்டால் விளையும் நோய்?
காலிபிளவரில் சாட்டை வால் நோய்.
19.கீழ்க்கண்டவைகளில் அதிகமாக நாட்டு உற்பத்திக்குக் ( GDP ) காரணமாக இருப்பது?
சேவைகள்.
20.தமிழ்நாடு அதிகப்படியாக உற்பத்தி செய்யும் பொருள்?
கரும்பு.
21.தமிழ்நாடு மாநில பறவை பெயர் யாது ?
மரகதப் புறா.
22.தென்னிந்தியப் புரட்சியில் தலைமையேற்று நடத்திய அரசி ஆவார்?
வேலு நாச்சியார்.
23.தூத்துக்குடிக்கும் எந்த நாட்டிற்கும் இடையே வ. உ. சிதம்பரம்பிள்ளை நிறுவிய சுதேசி கப்பல் நிறுவனம் கப்பல் பயணத்தை இயக்கியது?
இலங்கை.
24.கீழ்க்கண்டவைகளில் எது தமிழ்நாட்டின் பொருளாதாரத்தின் அம்சம்?
அதிக நகர வளர்ச்சி.
25.ஒரு தொலைநோக்கியின் கூருணர்வுத் திறன் . யில் மிக உயர்வானதாக இருக்கும்.?
நீல ஒளி.
26.காலம் சார் தொடர் வரிசையின் வரைபட முறையினை இவ்வாறும் அழைக்கலாம்?
செவ்வக வரைபடம்.
27. 73 வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் இவரது காலத்தில் நிறைவேற்றப்பட்டது?
நரசிம்மராவ்.
28.விலங்கின எலும்புகளினாலான மண் வகை காணப்படுவது?
விந்திய மலைகளின் மணற்பாறைகள் மற்றும் லடாக் மாக்கல் பாறை.
29.இந்து சமவெளி நாகரீகத்தில் இரண்டு பெரிய நகரங்கள் ஒத்த நகர திட்டத்தைக் கொண்டுள்ளன?
மொகஞ்சதாரோ, ஹரப்பா.
30.திரு. சுந்தர்லால் பகுகுனா பெற்ற விருது?
பத்ம விபூஷண்.
31.விஸ்கி மற்றும் பிராந்தியிலுள்ள ஈதைல் ஆல்கஹாலின் சதவீதம்?
40-50% ஈதைல் ஆல்கஹாலின்.
32.அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியவர்?
மு. கருணாநிதி.
33.ஷெர்ஷாவால் தோற்கடிக்கப்பட்ட முகலாய பேரரசர் யார் ?
ஹுமாயுன்.
34.ஆண்கள் ஒரினச் சேர்க்கையை டெல்லி உயர் நீதிமன்றம் அங்கீகரித்து உரிமைகள் வழங்கிய ஆண்டு?
2009.
35.தமிழ் தேசங்களின் ஒருங்கிணைப்பு இருந்ததற்கான சான்றுகள் கீழ்க்கண்டவற்றில் எதில் உள்ளது ?
ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலனின்.
36.இது எல்லாவிதத்திலும் அனைவருக்கும் சமய சுதந்திர உரிமையைக் கொடுக்கிறது?
சரத்து 25 முதல் 28 வரை.
37.தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் அதிக பங்கு வகிப்பது?
சேவைத்துறை.
38.படம் வர்ணம் தீட்டுதலில் அதிக ஆர்வம் காட்டிய முதல் முகலாய மன்னர்?
பாபர்.
39.இரட்டை அரசாங்க முறை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது ?
1919.
40.புவன்’ என்ற புதிய இணையதளம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வரைபடத்தை உருவாக்கியது?
இஸ்ரோ.
41.(0.0104−0.002)𝑜𝑓0.12+0.36∗0.0020.12∗0.12 ன் மதிப்பு என்ன ?
0.12.
42.இந்தியாவில் அதிகாரப் பகுப்பில், பொதுப் பட்டியலிலுள்ளவை?
47 துறைகள்.
43.காசநோய்க்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்தவர்?
ஆல்பர்ட் கல்மெட்டி.
44.கிரிக்கெட் வீரர் பிரெய்ன் லாரா எந்த நாட்டை சார்ந்தவர் ?
மேற்கிந்திய தீவுகள்.
45.டைபூன்கள் எங்கு பெரும்பாலும் காணப்படும் ?
மேற்கு பசிபிக்.
46.பின்வரும் ஐரோப்பியர்களில் முதலாவது இந்தியாவிற்கு வந்தவர்களும் கடைசியாக இந்தியாவை விட்டுச் சென்றவர்களும் யார் ?
போர்த்துக்கீசியர்கள்.
47.சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கோள் ?
வியாழன்.
48.ஒரு துகளின் மொத்த ஆற்றல் அதன் ஒய்வு ஆற்றலை விட மூன்று மடங்காக இருக்கும்போது, அத்துகளின் திசை வேகமானது ( c = ஒளியின் திசைவேகம் )?
2 \/2𝑐/3.
49.சூழ்மண்டலத்தில் மறுசுழற்சி ஆகாதது எது?
ஆற்றல்.
50.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) ; வைட்டமின் Kகுறைவால் ஏற்படுவது இரத்த உறைவின்மை,
காரணம் (R) ; போலிக் அமிலம் குறைவால் இரத்தசோகை உருவாகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
51.தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்ட பிரபலமான இந்திய ஒவியரின் பெயர் என்ன?
எம்.எப். ஹூசைன்.
52.அம்மோனோ டெலிசம் காணப்படுவது?
மீன்கள்.
53.உருகிய கால்சியம் ஹைட்ரைடு மின்னாற் பகுக்கப்படும் போது?
நேர்மின் முனையில் ஹைட்ரஜன் விடுபடுகிறது.
54.பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும் போது சேவை துறையின் பங்கு, தேசிய வருமானத்தில்?
அதிகரிப்பு.
55.1949-ல் நாட்டு தேசீய வருமான கணக்கில் ஈடுபட்ட குழுவில் யார் இடம் பெறவில்லை ?
தாதாபாய் நௌரோஜி.
56.ரூபி லேசரில், லேசர் செயற்பாடுக்கு காரணமான பொருள்?
𝐶𝑟3+.
57.குரோமோசோமின் நீள்வாக்கு பாதி இவ்வாறு அழைக்கப்படுகிறது ?
குரோமேடிட்.
58.ஜீன்" என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்?
ஜோஹன்சன்.
59.𝐴=[1 4] , f(x)= 𝑥2- 9 எனில், f(A) ன் மதிப்பு ?
[2 -1]
[0 0]
[0 0]
60.கீழ்க்கண்டவற்றுள் எதன் நீர்க்கரைசல் சிறந்த மின்கடத்தியாக செயல்படும்?
அம்மோனியம் அசிடேட்.
61.ஒரு அடர்மிகு ஃபிளிண்ட் கண்ணாடியின் தளவிளைவுக் கோணம் 60° 30 எனில், அதன் ஒளிவிலகல் எண்?
1.768.
62.A என்பவர் ரூ. 10,000 த்திற்கு ஒரு குதிரை வாங்கி அதனை B என்பவருக்கு 10% இலாபம் வைத்து விற்றார். B என்பவர் C என்பவருக்கு 10% நஷ்டத்துக்கு விற்றார். எனில் C கொடுத்த தொகை?
ரூ. 9,900.
63.பைட் என்பது?
8 பிட்ஸ்.
64.தமிழ்நாட்டில் எங்கு துரித போக்குவரத்து முறை அமைந்துள்ளது ?
சென்னை.
65.எண்டோதீசியம் மற்றும் எண்டோதீலியம் என்னும் அமைப்புகள் முறையே இவற்றோடு தொடர்பு உடையவை?
மகரந்தப்பை மற்றும் சூலுறை.
66.தமிழ்நாட்டில் பயிரிடப்படும் வர்த்தகப் பயிர்களில் கீழ்க்கண்டவைகளில் எது அதிகமாக உள்ளது?
நிலக்கடலை.
67.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 பட்டியல் II
a) அக்வா கல்சர் 4. மீன்
b) ப்ளோரி கல்சர் 3. பூக்கள்
c) செரி கல்சர் 1. சில்க்
d) விட்டி கல்சர் 2. கிரேப்ஸ்.
68.இந்திய ஐக்கியத்தின் மாநிலம் தனக்கே சொந்தமான அரசியலமைப்பை பெற்றுள்ளது.?
ஜம்மு மற்றும் காஷ்மீர்.
69.எந்த மாவட்டத்தில் தோடர்கள் (மலைவாழ் பழங்குடிகள் ) வாழ்கின்றனர்?
உதகமண்டலம்.
70.எந்த குன்றில் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?
சேர்வராயன்.
71.முகமைய கன சதுர அல்குசெல்லின் பொதிவு அடர்த்தி எவ்வளவு?
74%.
72.நிலத்தில் சமதளம் என அறியப்படுவது?
அபிசல் சமநிலம்.
73.கீழ்க்கண்ட எந்த நிகழ்ச்சிகள் மைட்டோக்காண்ட்ரியாவில் நடைபெறுகின்றன?
டிரை கார்பாக்ஸிலிக் அமில சுழற்சி.
74.கீழ்க்கண்ட அமைப்புகளில் எந்த ஒன்றில் இந்தியா உறுப்பினராக உள்ளது?
ஆசிய வளர்ச்சி வங்கி.
75.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறின்ால் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்.
காரணம் (R) : அந்த அமைச்சர் மட்டும் பதவி விலக வேண்டும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) சரி, ஆனால் (R) தவறு.
76.சைனாப்ஸ் காணப்படுவது?
நரம்பு மண்டலம்.
77.அம்மோனியா ஆக்ஸிஜனில் எரியும்போது கீழ்க்கண்ட அயனிசேர்மம்-ஐ வெளிப்படுகிறது?
𝑁𝑂2+𝐻2𝑂.
78.நாமக்கல் மாவட்டம் எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?
1987.
79.இவற்றுள் இந்தியாவின் முதன் முதலாக தந்தித் தொடர்பு நிறுவப்பட்ட இடங்கள் எவை ?
கொல்கத்தா மற்றும் டைமண்ட் துறைமுகம்.
80.கூட்டு நிகழ்வெண் பரவலுக்கான வரைபடம்?
ஓகிவ்.
81.தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்து உயர்த்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்?
காதி மற்றும் கிராம தொழில் குழுமம்
இந்திய மக்களின் மேம்பாட்டிற்கான செயிலமைப்பு
ஊரக தொழில்நுட்பம் மற்றும் மக்களின் செயலை முன்னேற்றுவதற்கான குழு.
82.திருப்பூர் குமரன் இறந்த ஆண்டு?
1932.
83.. எந்த அரசரின் காலத்தில் காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயம் கட்டப்பட்டது?
ராஜசிம்ஹா.
84.சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படும் தண்ணிர் கிடைக்கும் துணை நீர் ஆதாரம்?
கிருஷ்ணா நதிநீர்.
85.இவற்றில் எந்த அமைப்பு ஒளி சுவாச நிகழ்ச்சியில் பங்கேற்கிறது?
பெராக்ஸிசோம்.
86.விசரல் ஆர்ச்சஸ் எதனை தாங்குகிறது?
பேரிங்க்ஸின் சுவர்.
87.மின்னாற் பகுத்தல் விதியை கண்டுபிடித்தவர்?
பாரடே.
88.தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு?
1.30,0588 சதுர கி.மீ.
89.மின்காந்த அலைகள் என்ற கருத்தை முதன் முதலில் கண்டுபிடித்தவர்?
மேக்ஸ்வெல்.
90.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : பிராந்திய வளர்ச்சி வேறுபாடுகள், திட்டமிடுதல் மூலம் தொடர்ந்து
குறைந்து கொண்டே வருகிறது.
காரணம் (R) ; இந்திய வேளாண் தொழில்நுட்பம் அளவு பொதுவானது, ஆனால் வளமை பொதுவானதல்ல.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) தவறு, ஆனால் (R) சரி.
91.பட்டியல் I உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு፡-
பட்டியல் 1 பட்டியல் II
a) TIFR 3. மும்பை
b) விண்வெளி இயற்பிய 1. திருவனந்தபுரம்
c) SHARE 4. பூரீஹரிக்கோட்டா
d) ISRO விண்வெளி 2. பெங்களூரு ஆய்வுக்கூடம்.
92.இந்தியாவில் இறுதியாக மேற்கொள்ளப்ப்ட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு?
2011.
93.நிலச்சீர்திருத்தங்கள் கீழ்க்கண்ட எதை உட்கொண்டிருக்கவில்லை?
விவசாயிகளுக்கு வீட்டுக்கடன் அளித்தல்.
94.சுதந்திர இந்தியாவில் சென்னை மாநில அமைச்சரவையில் இடம்பெற்ற கேப்டன் லட்சுமி என்ற பெண்மணி
I. தேச பக்தையாகிய அம்மு சாமிநாதனின் மகள்
II. ஜான்சி படையினரின் தலைவர்
III. இங்கிலாந்தில் கல்வி பயின்றவர்
IV. இந்திய தேசிய படையின் தலைவர்.
இவற்றுள்:
I மற்றும் II.
95.நட்சத்திரக்கூட்டம் என்பது ______________ பொருட்களால் மிகப்பெரிய நிறை.?
நட்சத்திரங்கள், நெபுலா, நட்சத்திரமில்லாத பொருள்.
96.ஒரு கடைக்காரர் 30 சதவிகித லாபம் தனது பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறார். ஆனால் உடனடியாக பணம் செலுத்தினால் 10 சதவிகிதம் தள்ளுபடி கொடுக்கிறார் என்றால் அவருடைய லாப சதவிகிதம் எவ்வளவு ?
17%.
97.புள்ளியியலின் பணிகளாவன?
தரவு சேகரித்தல்
தரவு தொகுத்தலும் அட்டவணைப்படுத்தலும்
தரவு பகுப்பாய்வு செய்தல்.
98.ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்ட வருடம்?
1980-81.
99.ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட மொத்த செலவீனம் ரூ. 1,080 மற்றும் உணவுக்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 450 எனில், வட்ட விளக்கப்படத்தில் இதை குறிப்பிட வை பாகையின் மதிப்பானது?
150.
100.பட்டியல் I & பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் 1 பட்டியல் II
a) சேரர் 3. வில் மற்றும் அம்பு
b) சோழன் 4. புலி
c) பாண்டியா 2. மீன்
d) பல்லவர் 1. எருது.
101.5 ஐச் சராசரியாகக் கொண்ட, கீழ்க்கண்ட புள்ளிவிவரங்களில் விடுபட்ட விவரத்தைக் காண்க.
2, 6, 5, 3, 8, 2, __ 9, 7, 7, 6, 4?
1.
102.தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு மின்வசதி செய்துள்ள அளவு?
99%.
103.பின்வருவனவற்றுள் எது சரியாக ஒப்பிடப்பட்டிருக்கிறது ?
மஹாவீரா - கடைசி தீர்த்தங்கரர்.
104.பின்வரும் எந்த காலத்தினை சிந்து நாகரிகத்திற்கு சர் ஜான் மார்ஷல் வழங்கினார் ?
கி.மு 3250 - 2750.
105.ஆரியர்களுடைய சபா, சமிதி என்ற சபைகள் யாரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தியது ?
மன்னனை (அரசன் ).
106.கீழ்க்காண்பவைகளில் தவறானது எது ? எதிர்ப்பு.
107.தமிழ்நாட்டின் மிக நீளமான ஆறு எது ?
காவேரி.
108.முல்லை.பெரியார் பிரச்சனைக்கு உட்பட்ட மாநிலங்கள் தமிழ்நாடு மற்றும்?
கேரளா.
109.செளரி-செளரா சம்பவத்திற்குப் பிறகு எந்த ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை மகாத்மா காந்தி தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்?
1922.
110.2000-2001 கணக்கெடுப்பின்படி இந்தியாவின் முக்கிய நீர்ப்பாசன ஆதாரங்களின் வரிசை?
கால்வாய், கிணறு, குழாய் கிணறு, குளம்.
111.d-ஆர்பிட்டலின் கொள்ளளவு எத்தனை எலக்ட்ரான்கள் ?
பத்து.
112.ஒரு டெஸ்லா என்பது?
வெபர் மீ-2.
113.எந்த மாநிலம் குறைந்த கல்வி அறிவு விகிதம் பெற்றுள்ளது ?
பீகார்.
114.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க
I அரசு நெறிக் கொள்கை அரசியல் அமைப்பின் ஆன்மாவாக கருதப்படுகின்றது
II அரசு நெறிக் கொள்கை உரிமைகளை பாதுகாக்கும் கருவியாக உள்ளது
III அரசு நெறிக் கொள்கை அரசியல் அமைப்பு பரிகாரங்களுக்கான உறுதுனையாகும்
IV அரசு நெறிக் கொள்கை தனி நபர் சொத்து விரிவாக்க சம்பந்தமானது.
இவற்றுள் :
I மற்றும் II சரியானவை.
115.அலைவெண் சார்பிகள் (தொடர்பு ) வரையறுக்கப்படுவது?
பிரிவு அலைவெண்/பிரிவு அலைவெண்.
116.சக சகாப்தத்தின் அடிப்படையில் . முதல் தேசிய நாட்காட்டி ஏற்கப்பட்டது.?
22-மார்ச், 1957.
117.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி : கூற்று
(A) வீரபாண்டிய கட்டபொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் கொடுத்தவர் புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாத தொண்டைமான் காரணம்
(R) : இவர் ஆங்கிலேயரின் நண்பர்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
118.இந்தியாவில் நிதிக் குழுவை நியமிப்பவர் யார் ?
இந்திய ஜனாதிபதி.
119."பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியா தமிழ்நாட்டில் எந்த இடத்தில் உள்ளது ?
கோயம்புத்தூர்.
120.குறிப்பிட்டதொரு நோக்கத்திற்காக சேகரிக்கப்படாத தரவு . என்று அழைக்கப்படுகிறது.?
இரண்டாம் நிலை தரவு.
121.சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் இந்திய பாராளுமன்றத்தில் .
இயற்றப்பட்டது.?
மே, 2005.
122.இந்தியாவில் செங்கற்களால் ஆன மிகப் பழமையான கோயில் யார் காலத்தில்?
மெளரிய அரசர்கள்.
123.கட்சி தாவல் சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எந்த கீழ்க்கண்ட காரணத்தால் தனது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்
I. தன்னிச்சையாக கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால்
II. தனது கட்சியின் கட்டளைக்கு விரோதமாக பாராளுமன்றத்தில் ஒட்டு போடும்போது அல்லது போடாமல் இருந்தால்
III. கட்சியில் இருந்து நீக்கப்பட்டால்
IV. தான் ஜெயித்த கட்சியை விட்டுவிட்டு வேறு ஒரு அரசியல் கட்சியில்
சேரும்போது. இவற்றுள் :
I, II, & IV.
124.பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
குறியீடுகள் :
பட்டியல் 1 பட்டியல் II
நானா சாகிப் 1857 ஆம் ஆண்டு கலகம்
வேலூர் கலகம் 1806
கர்சான் பிரபு வங்கப்பிரிவினை
இந்திய சுதந்திரச் சட்டம் 1947.
125.இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம்?
தமிழ்நாடு.
126.பாண்டியர் ஆட்சியை காவேரி வரை பரப்பி அதனை ஒருங்கிணைத்த மன்னர்?
சுந்தர பாண்டியன்.
127.வலிமைமிக்க கப்பற்படை வைத்திருந்த சோழ அரசர்?
மகா இராஜராஜன்.
128.இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் தேசிய அவசரநிலைப் பிரகடனப்படுத்திய ஆண்டு?
1975.
129.கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பின் சிறப்புத் தன்மையன்று ?
அரசு நெறிக்கொள்கை.
130.ஒரு செல்லில், உட்கருவைத் தவிர வேறு எந்த நுண்ணுறுப்பில் டி.என்.ஏ. உள்ளது?
மைட்டோகாண்ட்ரியா.
131.கணினி அறிவியல் பாடத்தில் 7 மாணவர்கள் எடுத்த மதிப்பெண் விவரங்கள் : 45, 40, 60, 90,80, 65, 55
இவற்றின் இடைநிலை மதிப்பானது?
60.
132.டீ பிராக்லி அலைநீளத்தை அளக்கும் பரிசோதனையை முதலில் செய்த விஞ்ஞானி?
டேவிசன்-ஜெர்மர்.
133.எந்த வாயு வளிமண்டலத்தில் அதிக அளவில் உள்ளது ?
நைட்ரஜன்.
134.1 kB நினைவு என்பது?
210 பைட்டுகள்.
135.பாலிகார்பிக் தாவரத்திற்கு உதாரணமாக இதனை கூறலாம்?
மாங்காய்.
136.இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா.
137.மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயிலைக் கட்டியவர்?
இரண்டாம் நரசிம்மவர்மன்.
138.தேசிய உயிரியல் பல்வகைமை ஆணையத்தின் தலைவர் யார் ?
P. L. கவுதம்.
139.தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம் இடம்?
சென்னை.
140.பின்வருவனவற்றுள் இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றி சரியானது எது ?
அமைதியை ஊக்குவித்தல்
கூட்டுச்சேரா கொள்கை
பஞ்சசீலம்.
141.மஹாயானிசத்தின் மிகப்பெரிய விளக்கவுரையாளர்?
நாகார்ஜூனா.
142.லேட்ரைட் மண் உருவாக உகந்தநிலை?
அதிக வெப்பம் மற்றும் மழையளவு.
143.குதிக்கும் ஜீன்கள் அல்லது டிரான்ஸ்போசான்களின் கண்டுபிடிப்புக்கு கீழ்காணும் எந்த அறிஞருக்கு ( அறிஞர்களுக்கு ) நோபல் பரிசு கிடைத்தது ?
பார்பரா மெக் கிளிட்டோக்.
144.இந்தியா எந்த ஒரு அண்டை நாட்டுடன் அதிகமான நில எல்லையை பங்கு கொள்கிறது ?
பங்களாதேஷ்.
145.நிலையில்லாத் தன்மை கொள்கையை அளித்தவர்?
ஹெய்சன்பெர்க்.
146.அண்மையில் 200 ஆண்டு பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்ட விஞ்ஞானி?
சார்லஸ் டார்வின்.
147.கீழ்க்காணும் உலோக அயனிகளில் கேன்சர் நச்சுத்தன்மை வாய்ந்த உலோக அயனி எது ?
𝐶𝑟6+
148.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) ; அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் கட்டுவதால் வெள்ளப்பெருக்கை குறைக்க முடியும்
காரணம் (R) : வெள்ளம் ஏற்படும் காலங்களில் அதிகப்படியான நீர் அணைகளில் சேகரித்து வைக்கப்படும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் (R} இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான
விளக்கம்.
149.வென்சுரி மீட்டர் கீழ்க்காணும் எந்த ஒன்றை அளவிட பயன்படுகிறது ?
திரவத்தின் வேகம்.
150.சென்னைக்கு குடிநீர் கொண்டு வர பூண்டி நீர் தேக்கத்தை திட்டமிட்டவர்?
சத்தியமூர்த்தி ஐயர்.
151.இந்தியாவில் வாழும் எதிர்பார்க்கும் வயது சிறப்பாக 1981-ஆம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை அதிகரித்துள்ளது?
54 ஆண்டுகளில் இருந்து 653 ஆணடுகள் வரை.
152.மக்கட்தொகை கணக்கெடுப்பு 2001, ன் படி இந்தியாவில் பால் வேறுபாட்டு விகிதம் 1000 ஆண்களுக்கு . பெண்கள்.?
933.
153. சென்னை அரசு முதல் வகுப்புவாரி அரசு ஆணையை எப்பொழுது வெளியிட்டது ?
1921.
154.காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்?
இரவீந்திரநாத் தாகூர்.
155.பின்வருபவர்களில் தேசிய உயர்கல்வி மற்றும் ஆராய்சிக்குழு ( NCHER ) அமைக்கப்படுவதற்கான பரிந்துரையைச் செய்தவர் யார் ?
பேரா. யஷ்பால்.
156.பிஸிக்கல் ரிசர்ச் லாபரட்டரி (Physical research laboratory) இருக்கும் இடம்?
அகமதாபாத்.
157.கீழ்க்கண்ட வாக்கியங்களைக்
கவனி : (A) அட்டவணையின் அடிப்படை வகைப்படுத்துதல்.
காரணம் (R) : முதலில் விவரங்கள் வகைப்படுத்தப்படுகின்றன பின்னர் அட்டவணையிடப்படுகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் {R} இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
158.கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது ?
டிரோப்போஸ்பியர் - வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு.
159.வரலாற்றிற்கு முந்தைய இந்தியா எத்தனை ஆண்டுகளுக்கு முந்தையது ?
500000.
160.அலகாபாத் கல்தூண் கல்வெட்டினை வரைந்தவர்?
ஹரிசேனர்.
161.சாத்தனூர் அணைக்கட்டு எந்த நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது ?
தென்பெண்னை.
162.எது சரியானது ?
2007-09 - பூமிக்கு சர்வதேச ஆண்டு.
163.உதயகிரிக் கோட்டை அமைந்துள்ள இடம்?
கன்னியாகுமரி.
164.சோழ அரச வம்சம் பண்டைய தமிழ் அரச வம்சமாகும். அது எந்த நதிக்கரையில்அமைந்திருந்தது ?
காவேரி.
165.தமிழ்நாட்டில் பொதுவாக அதிகமாக பாசனத்திற்கு பயன்படுத்தப்படுபவை?
கிணறு.
166.பட்டியல் 1 ஐ பட்டியல் I உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a) சங்கராச்சார்யா 3. அத்வைதம்
b) ராமானுஜர் 4. விஸிஸ்டாத்வைதம்
c) மத்வாச்சார்யா 1. இரட்டை தன்மை
d) பஸ்வேஸ்வரா 2. வீரசைவம்.
167. இந்திய சுதந்திர மசோதா, இங்கிலாந்து பொது சபையில் கொண்டு வந்த நாள்?
4 ஜூலை, 1947.
168.கொடுக்கப்பட்டுள்ளவை
விபத்துக்கான காரணம் தீ வாகனப் போக்குவரத்து விழுதல் தீக் காயங்கள் பொருள் விழுதல்
இதர பிற
விபத்துக்களின் எண்ணிக்கை 10 15 20 15 35
5
மேற்காணும் விபரங்களுக்கு தகுந்த விளக்கப்படமானது:
வட்ட விளக்கப்படம்.
169.தேசிய மக்கள்தொகை பதிவு சார்ந்தது?
குடியுரிமை சட்டம் 1955 மற்றும் குடிமகன் விதிகள் 2003.
170.திருமணத்தின்போது பெண்களின் வயது குறித்த விவரங்கள் கீழ்க்கண்ட அலைவெண்
பரவல்மூலம் அட்டவனைப்படுத்தப்பட்டது
வயதின் பிரிவு (வருடங்களில் ) பெண்களின் எண்ணிக்கை
15-19 11
20-34 36
25-29 28
30-34 13
35-39 7
40-44 3
44-49 2
கொடுக்கப்பட்டுள்ள பரவலானது?
தொடர்ச்சியானது அல்ல.
171.குழந்தை திருமணத்தை ஒழிக்க சட்டம் ஆண்டில் இயற்றப்பட்டது.?
1929.
172.பாக்டீரியாக்களின் செல்சுவரில் உள்ளது?
மியூக்கோபெப்டைடு.
173.தற்போது உபயோகப்படுத்தும் உயிரியல் வகைப்பாடுகளை ஏற்படுத்தியவர்?
கரோலஸ் லின்னேயஸ்.
174.கீழ்க்கண்ட எந்த பொருளின் குறைவின் காரணமாக சர்க்கரை நோய் உண்டாகின்றது ?
இன்சுலின்.
175.கீழ்க்கண்டவற்றுள் அதிகமான மின்சாரத்தை உருவாக்க உதவுவது?
அனல் மின்சாரம்.
176.சமதள விளைவி 264° திரும்பினால், 20 செ.மீ நீளமுள்ள குழாயிலுள்ள 20% சர்க்கரை கரைசலின் தன் சுழற்சி?
66.
177.உலக நீர் தினம் அனுசரிக்கப்படுவது?
மார்ச் , 22.
178.கீழ்வருவனவற்றுள் தென் இந்தியாவின் கங்கை என்றழைக்கப்படுவது எது ?
காவேரி.
179.நிலநடுக்கத்தை அளக்க பயன்படும் ரிக்டர் அளவுகோலை வடிவமைத்தவர்?
சார்லஸ் ரிச்சர்.
180.இன்புளுயன்சா A ( H1N1 ) எனப்படும் பன்றிக்காய்ச்சல் நோய் முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்ட இடம்?
மெக்சிகோ.
181.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. இந்தியாவில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு நீதித்துறையின் நேரடி பரிகாரம் ஏதுமில்லை.
I. இந்தியாவில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு நீதித்துறையின் நேரடிப் பரிகாரங்கள் சில உண்டு.
இவற்றுள் :
1 மட்டும் சரியானது.
182.தேசிய விவசாயிகள் குழுவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004-ஆம் ஆண்டு தலைமையில் அமைந்தது.?
டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன்.
183.தாவர செல்களில் வாக்குவோல்களை சுற்றியுள்ள ஒற்றை படலத்தின் பெயர்?
டோனோபிளாஸட்.
184.ஷரத்து 368 ன் படி உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளை திருத்தம் செய்ய இயலாது என்று எந்த வழக்கில் கூறியுள்ளது ?
கோலக்நாத் எதிராக பஞ்சாப் மாநிலம்.
185.உயிரினங்களுக்கு பெயரிட இரு சொற்பெயரிடு முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ?
C. லின்னேயஸ்.
186.பிரம்மதேயம் என்னும் சொல் எதனைக் குறிக்கும் ?
பிராமணருக்கு அளிக்கப்பட்ட நிலம்.
187.பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது ?
டெம்ஸ்டர் நிறை நிறவரைவி - ஐசோடோப்புகளின் நிறை.
188.புகழ்பெற்ற செல் பயாலஜி எனும் புத்தகத்தை எழுதியவர்?
டிராபர்ட்டீஸ்.
189.நேர்முக வரி என்பது கீழ்க்கண்டவற்றில் எது?
விற்பனை வரி
உற்பத்தி வரி
சுங்க வரி
இவற்றுள் எதுவுமில்லை.
190.கீழ்க்கண்டவற்றுள் எந்த நாடு ஆசியானில் (ASEAN ) உறுப்பினராக இல்லை ?
சீமா.
191.அமீபிக் பேதி நோய் உருவாக்கும் உயிரினம்?
என்ட்அமிபா ஹிஸ்டோலைடிகா.
192.கீழ்க்கண்ட வாக்கியங்களைக்
கவனி : (A) : விளக்கப்படங்கள் ஒப்பிட்டுப் பார்க்க மட்டுமே பயன்படுகின்றன.
காரணம் (R) = விளக்கப்படங்களை கணித தொடர்பாக படிக்க இயலாது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
(A) மற்றும் (R) இரண்டும் சரி.
193.பின்வருவனவற்றுள் எந்த ஒரு பலபடி இயற்கையாக கிடைக்கின்றது?
செல்லுலோஸ்.
194.ஹைட்ரஜன் ( Hydrogen ) அணுவின் எலக்ட்ரானின் அடிநிலை ஆற்றல் 136 eV என்று இருந்தால் n = 2 கிளர்ச்சி நிலையில் ஆற்றல் என்னவாக இருக்கும் ?
13.6 eV.
195.டெல்லி செங்கோட்டையை கட்டியவர்?
ஷா ஜஹான்.
196.மஞ்சளின் தாவரவியல் பெயரானது?
கர்கூமா டொமஸ்டிகா.
197.2009 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்?
பராக் ஒபாமா.
198.சந்திராயன் இராக்கெட்டை விண்ணுக்கனுப்பிய செயல்திட்ட இயக்குநர் தமிழகத்தைச் சார்ந்தவர். அவர் யார்?
டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.
199.புவியதிர்வு அலைகளை பதிவு செய்யும் கருவி?
சீஸ்மோகிராப்.
200.இந்தியப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ( PMEAC ) தற்போதைய தலைவர் யார் ?
சி. ரங்கராஜன்.
Comments
Post a Comment