####அறிவோம்####
நடப்பு நிகழ்வுகள் / CURRENT AFFAIRS 27/09/2018
நடப்பு நிகழ்வுகள் / CURRENT AFFAIRS
27/09/2018
1. அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட "நெல்சன் மண்டேலாவின் அமைதிக்கான பத்தாண்டுகள்" எது?
2019 முதல் 2028 வரை.
2. எந்தத் தேதியில் முதலாவது உலக சைகை மொழிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது?
செப்டம்பர் 23
3. வங்காள மாவட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை உருவாக்கியுள்ள ஐஐடி எது?
ஐஐடி கரக்பூர்
4. உச்சநீதிமன்றத்தால் அண்மையில் உருவாக்கப்பட்ட நீதிபதி அமிதவா ராய் குழுவின் நோக்கம் என்ன?
சிறைத்துறை சீர்திருத்தங்கள்.
5. சியாட்டிலைச் சேர்ந்த சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடு நிறுவனத்தின் முதல் அறிவியல் ஆராய்ச்சியின் படி சுகாதார பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கான தரவரிசையில் இந்தியாவின் தரவரிசை என்ன?
158 வது.
6. ஐக்கிய அரபு அமீரகமும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து அண்மையில் எந்தெந்த நாடுகளில் மனிதநேய முயற்சிகளை ஆதரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடான?
எமன், மியான்மர், காங்கோ.
7. மதங்களுக்கு இடையிலான கூட்டணி மாநாட்டை நடத்தவுள்ள நாடு எது?
ஐக்கிய அரபு அமீரகம்.
8. எந்த நாட்டில் பிரபல இந்திரா ஜாத்ரா விழா தொடங்கியுள்ளது?
நேபாளம்.
9. போக்குவரத்து சந்திப்புகளுக்கான எந்த வாகன மாசு கட்டுப்பாட்டு சாதனத்தை சமீபத்தில் மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது?
WAYU - Wind Augmentation Purifying Unit.
10. எந்த நாட்டில் காந்தி அணிவகுப்பு நடத்த இந்தியா முடிவுசெய்துள்ளது?
நெதர்லாந்து.
11.
மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 80கிலோ பிரிவில் போட்டியிட்ட சென்னை அடையாறு போக்குவரத்து தலைமை காவலர் புருசோத்தமன் "மிஸ்டர் தமிழ்நாடு" பட்டத்தை பெற்றார்.
Comments
Post a Comment