####அறிவோம்####
நடப்பு நிகழ்வுகள் / CURRENT AFFAIRS
unselectable text.
நடப்பு நிகழ்வுகள்
CURRENT AFFAIRS
28 - 09 - 2018
1. கால்பந்து போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றது, ஜெர்மனி!!

- 24 அணிகள் இடையிலான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
- 16–வது ஐரோப்பிய கால்பந்து போட்டி 2020–ம் ஆண்டு பான் ஐரோப்பிய நாடுகளில் (12 நாடு)நடத்தப்படுகிறது.
- 2024 ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த ஜெர்மனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பு (UEFA) அறிவித்துள்ளது.
2. சுற்றுலா துறை ஆந்திரா முதலிடம்!!

- 2016 – 17ம் ஆண்டுக்கான, சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்கிய மாநிலங்களின் பட்டியலில், ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளது.
- இந்த மாநிலத்திற்கு, தேசிய சுற்றுலா விருதை, டில்லியில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர், கே.ஜே. அல்போன்ஸ் வழங்கினார்.
- இந்த பட்டியலில், இரண்டாம் இடத்தில், கேரளாவும், மூன்றாம் இடத்தில், கோவாவும், ராஜஸ்தானும் உள்ளன.
3. இந்திய வம்சாவளிக்கு ஐகான் விருது!!

- பிரிட்டன் தலைநகர் லண்டனில், சமீபத்தில், 21ம் நுாற்றாண்டின், சிறந்த, "ஐகான்" எனப்படும், சிறந்த முன்னோடியாக உள்ளவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
- இதில், தொழில் துறையில் சாதனை புரிந்ததற்காக, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட, பிரபல தொழில் அதிபர், சஞ்சீவ் குப்தாவுக்கு விருது வழங்கப்பட்டது.
4. அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்!!

- காசநோயை முற்றிலும் ஒழிக்க, அமெரிக்காவுடன், இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
- சமீபத்தில், இதற்கான ஒப்பந்தம், அமெரிக்காவின் நியூயார்க்கில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஜே.பி. நட்டா முன்னிலையில் கையெழுத்தானது.
- இதன்படி, இந்த நடவடிக்கைக்காக, முதற்கட்டமாக, 216 கோடி ரூபாயை, அமெரிக்கா வழங்கி உள்ளது.
5. உலக ரேபிஸ் தினம்!!

- ரேபிஸ் வைரசால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்., 28ல், உலக ரேபிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- ரேபிஸ் வைரஸ்க்கு, 1885ல் முதன் முதலில் பிரான்சை சேர்ந்த லுாயிஸ் பாஸ்டர் தடுப்பு மருந்து கண்டுபிடித்தார். இவரை கவுரவப்படுத்தும் விதமாக, அவரது நினைவு தினம், உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- 2030ம் ஆண்டுக்குள் ரேபிஸ் வைரசால் உயிரிழப்பே இருக்கக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்து உள்ளது.
6. நீளம் தாண்டுதல் - ஸ்ரீஷங்கர்!!

- ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 58-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது.
- ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 19 வயது இளைஞரான ஸ்ரீஷங்கர் முரளி 8.20 மீட்டர் தூரம் தாண்டி முதல் இடத்தை பிடித்தார். மேலும் தேசிய சாதனையும் படைத்தார்.
- இதற்கு முன் அங்கித் ஷர்மா 8.19 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது. அதை தற்போது ஸ்ரீஷங்கர் முறியடித்துள்ளார்.
- இந்த சீசனில் 20 வயதிற்கு உட்பட்ட வீரரின் அதிகபட்ச தூரம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
7. அசாம் மாநில தூதராக ஹிமாதாஸ்!!

- இளம் ஓட்டப்பந்தைய வீரங்கனையான ஹிமா தாஸ் உலக ஜூனியர் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.
- மேலும் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார்.
- அவருக்கு சமீபத்தில் அர்ஜூனா விருதை மத்திய அரசு வழங்கியது.
- இதற்கிடையே 18 வயதான ஹிமா தாசை அசாம் மாநில தூதராக அம்மாநில அரசு அறிவித்தது.
- இதற்கான அறிவிப்பை அசாம் முதல்- அமைச்சர் சர்பானாந்த் சோனாவால் அறிவித்துள்ளார்.
8. சீனாவுக்கான இந்திய தூதராக விக்ரம் மிஸ்திரி!!

- மியான்மர் நாட்டுக்கான இந்தியாவின் தலைமை தூதராக விக்ரம் மிஸ்திரி பொறுப்பு வகித்து வருகிறார்.
- சீனா நாட்டுக்கான இந்திய தலைமை தூதர் கவுதம் பம்பாவாலே-வின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது.
- இந்நிலையில், புதிய தலைமை தூதராக விக்ரம் மிஸ்திரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
9. சுகிஜி மீன்மார்க்கெட்!!

- உலகின் மிகப்பெரிய மீன்சந்தையாகக் கருதப்படும் சுகிஜி மீன்மார்க்கெட் கடந்த 83 ஆண்டுகளில் முதன்முறையாக வரும் அக்டோபர் 6 அன்று மூடப்படுகிறது.
- டோகுகாவா ஷூகுநேட் என்ற ராணுவ அரசாங்கம் நடத்திவந்த சர்வாதிகாரியின் காலத்தில் சுமிதா நதிக்கரையில் 1657ல் சுகிஜி மார்க்கெட் தொடங்கப்பட்டது.
- ஜப்பானிய கடல் உணவுகளின் மெக்கா என அழைக்கப்படும் சுகிஜி மீன் மார்க்கெட், பார்வையாளர்கள் மற்றும் வியாபாரிகளை ஈர்ப்பதற்கான சவால்களை எதிர்கொள்ளும் நவீன உத்திகளோடு வரும் அக்டோபர் 11 லிருந்து டோயோசு மார்க்கெட்டில் இயங்க உள்ளது.
10. சூச்சியின் கவுரவ குடியுரிமைப் பட்டம் - கனடா!!

- ரோஹிங்கியா விவகாரத்தில் மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சி மீது எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து அவருக்கு வழங்கிய கவுரவ குடியுரிமைப் பட்டத்தைத் திரும்பப் பெறுவதாக கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- 2007-ம் ஆண்டு கனடா அரசின் கவுரவ குடியுரிமைப் பட்டம் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்டது. கனடா அரசு வெகு சிலருக்கு மட்டுமே இப்பட்டத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
11. 7வது முறையாக ஆசியக் கோப்பை!!

- ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை வென்று இந்திய அணி 7-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.
- கேதார் ஜாதவ், புவனேஷ்வர் குமார், ஜடேஜா பங்களிப்பினால் இந்திய அணி 50வது ஓவரின் கடைசி பந்தில் வென்றது.
- Man of the Match - லிட்டன் தாஸ்
- Man of the Series - ஷிகர் தவான்
12. ஆஸ்திரேலிய அணிக்கு இரு துணை கேப்டன்கள்!!

- முதன்முறையாக ஆஸ்திரேலிய அணிக்கு இரு துணை கேப்டன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹசல்வுட் ஆகியோர் இனிமேல் துணை கேப்டன்களாக செயல்படுவார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
- இவர்கள் இருவரையும் கேப்டன் டிம் பெய்ன் மற்றும் சக அணி வீரர்கள் வாக்களிப்பு முறையில் தேர்வு செய்தனர்.
- இதற்கு பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், தேர்வுக் குழுத் தலைவர் டிரெவர் ஹான்ஸ் ஆகியோரை உள்ளடக்கிய குழு அனுமதி வழங்கியுள்ளது.
13. பார்க்லேஸ் ஹீருன் இந்திய பணக்காரர் பட்டியல் – 2018!!

- பார்க்லேஸ் ஹீருன் இந்தியா பணக்காரர் பட்டியல் 2018-ல் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான பில்லியனர் முகேஷ் அம்பானி 7வது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
- இந்த பட்டியலானது இந்தியாவில் ரூ.1000 கோடி அல்லது அதற்கு மேல் நிகர மதிப்புடைய சொத்துக்களை கொண்ட தனிநபர்களின் தொகுப்பாகும்.
- திரு. அம்பானியைத் தொடர்ந்து லண்டனைச் சேர்ந்த S.P. ஹிந்துஜா மற்றும் L.N. மிட்டல் ஆகியோர் உள்ளனர்.
- அசிம் பிரேம்ஜி இப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
- இந்த பட்டியலில் உள்ள 831 தனிநபர்களின் சொத்து மதிப்பானது 719 பில்லியன் டாலராக உள்ளது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால்பங்கு ஆகும்.
14. மனித மூலதன மதிப்பீடு!!
- கல்வி மற்றும் சுகாதாரப் பணிகளில் முதலீடு செய்வதில் இந்தியாவானது உலகின் 158வது இடத்தில் உள்ளது.
- இந்த ஆய்வானது ‘த லான்சட்’ என்ற பத்திரிக்கையில் பிரசுரமாகியுள்ளது.
- இந்த ஆய்வு பின்லாந்தை முதலிடத்தில் வைத்துள்ளது.
- இதில் அமெரிக்கா 27ம் இடத்திலும், சீனா 44வது இடத்திலும், பாகிஸ்தான் 164வது இடத்திலும் உள்ளன.
கீழ்க்காணும் தெற்காசிய நாடுகள் இந்தியாவுக்கு கீழ்நிலையில் உள்ளன.
- பாகிஸ்தான் (164)
- வங்காள தேசம் (161)
- ஆப்கானிஸ்தான் (188)
அதே பிராந்தியத்தில் கீழ்க்காணும் நாடுகள் மனித மூலதனத்தின் அடிப்படையில் இந்தியாவை விட சிறப்பாக செயல்படுகின்றன.
- இலங்கை (102)
- நேபாளம் (156)
- பூடான் (133)
- மாலத்தீவுகள் (116)
15. முதல் ஸ்மார்ட் ரயில் பெட்டிகள்!!

- சர்வதேச தரத்தில், கருப்பு பெட்டி மற்றும் செயற்கை நுண்ணறிவில் (Artificial Intelligence AI) இயங்கும் சி.சி.டி.வி போன்ற புதிய அம்சங்களுடன் கூடிய முதல் ஸ்மார்ட் ரயில் பெட்டிகளை“மாடர்ன் கோச் பேக்டரி – ராய் பரேலி” அறிமுகம் செய்துள்ளது.
16. BSF மற்றும் SSB புதிய அதிகாரிகள் நியமனம்!!

- மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் ரஜினி கான்ட் மிஸ்ரா மற்றும் எஸ்.எஸ். தேஷ்வால் ஆகியோர் முறையே மத்திய துணை ராணுவப்படையான எல்லை பாதுகாப்புப் படை (BSF) மற்றும் சஷாஸ்ட் சீமா பால் (SSB) அமைப்பின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- ரஜினி கான்ட் மிஸ்ரா(BSF) கே.கே. ஷர்மாவின் இடத்தை நிரப்புகிறார்.
17. ஒரே இந்திய வீரர் எம்.எஸ். தோனி!!

- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 பேரை ஆட்டமிழக்க செய்த ஒரே இந்தியர் என்ற பெருமையை எம்.எஸ். தோனி பெற்றுள்ளார்.
- ஏற்கெனவே அதிக ஸ்டம்பிங் செய்தவர் எனும் சர்வதேச பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள தோனி, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது, மோர்தாசாவை ஆட்டமிழக்கச் செய்தார்.
- இந்த ஸ்டம்பிங் மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 பேரை ஆட்டமிழக்கச் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை தோனி படைத்துள்ளார்.
18. நெல்சன் மண்டேலா!!

- இந்த ஆண்டு நெல்சன் மண்டேலா பிறந்த 100வது ஆண்டாகும். இதனால் ஐ.நா. சபை ஆனது 2019-2028 காலத்தை "நெல்சன் மண்டேலா சமாதானத்தின் தசாப்தம்" என அறிவித்துள்ளது.
- ஐக்கிய நாடுகளின் உயர்ந்த கொள்கைகள், சமாதானம், மன்னிக்கும் குணம், இரக்கம், மனிதர்களின் கௌரவம் ஆகியவற்றை மண்டேலா தன்னகத்தேக் கொண்டிருந்தார்.
- தென்னாப்பிரிக்காவில் பிறந்த நெல்சன் மண்டேலாவின் பிறப்பை கௌரவிக்கும் வகையில் அவரது சிலையானது ஐ.நா. சபையில் திறக்கப்பட்டது.
19. நிதி உள்ளடக்கல் குறியீடு!!
- மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சகமானது நிதி உள்ளடக்கல் குறியீட்டை புதுடெல்லியில் துவங்கியுள்ளது.வருடாந்திர FII ஆனது நிதித்துறை அமைச்சகத்தின் நிதிச்சேவைத் துறையால் வெளியிடப்படும்.
- இந்தக் குறியீடு 3 அளவீட்டு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. நிதிச் சேவைகளை அணுகல் நிதிச் சேவைகளின் பயன்பாடு தரம் இது பெரிய அளவிலான கொள்கை முன்னோக்குதலை வழிகாட்டும் நிதியியல் உள்ளடக்கலின் தெளிவான நிலையை அளிக்கும் ஒற்றைக் கலப்பு குறியீடாகச் செயல்படும்.
20. இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்!!

- இந்தோனேசியா நாட்டின் மத்திய பகுதியில் இன்று 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- அங்குள்ள டோங்லா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியது.
- இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
21. பசுமை நுகர்வோர் தினம்!!

- பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும்.நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.
- உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. செப்டம்பர் 28ஐ பசுமை நுகர்வோர் தினமாக கொண்டாடி வருகிறது.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment