####அறிவோம்####
முக்கிய வினா விடை - இந்திய அரசியல் நிர்ணய சபை 2
இந்திய அரசியல் நிர்ணய சபை
முக்கிய வினா விடை
1. இந்திய அரசியலமைப்பின்படி அரசின் தலைவர்?
குடியரசு தலைவர்.
2. இந்தியாவின் நிர்வாக தலைவர்?
குடியரசு தலைவர்.
3. இந்தியாவின் முப்படை தளபதி?
குடியரசு தலைவர்.
4. இந்திய அரசியலமைப்பின் அதிகார வரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுபவர்?
குடியரசு தலைவர்.
5. குடியரசு தலைவருக்கான தேர்தல் முறை?
ஒற்றை மாற்று விகிதாச்சார பிரதிநிதித்துவ வாக்கெடுப்பு முறை.
6. குடியரசு தலைவருக்கான பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர்?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.
7. குடியரசு தலைவரின் பதவி காலம்?
5 ஆண்டுகள்.
8. குடியரசு தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்வது என்றல் யாரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்கவேண்டும்?
துணை குடியரசு தலைவரிடம்.
9. குடியரசு தலைவர் எந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்குரிய தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்?
மக்களவை ( லோக் சபை )
10. துணை குடியரசு தலைவருக்கான பணிகள் குறித்த கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது?
அமெரிக்கா.
11. குடியரசு தலைவர் சம்பளம் குறித்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணை?
இரண்டாவது அட்டவணை.
12. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசு தலைவர்?
டாக்டர் சஞ்சீவி ரெட்டி.
13. இருமுறை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசு தலைவர்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
14. தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த முதல் குடியரசு தலைவர்?
கே.ஆர்.நாராயணன்.
15. குடியரசு தலைவர் தேர்தலுக்கு குறைந்தபட்ச வயது?
35.
16. குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட தேவையான ஆதரவு?
மூன்றில் இரு பங்கு.
17. குடியரசு தலைவர் மறு தேர்தலுக்கு தகுதி உடையவர?
ஆம்.
18. குடியரசு தலைவர் மீதான குற்ற விசாரணை எந்த சபையில் புகுத்தப்படலாம்?
மக்களவை அல்லது மாநிலங்கள் அவை.
19. குடியரசு தலைவர் மீதான குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர சபையின் எத்தனை பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை?
நான்கில் ஒரு பங்கு.
20. புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் எத்தனை மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும்?
6 மாதங்களுக்குள்.
21. இந்தியாவின் பிரதிநிதி யார்?
குடியரசு தலைவர்.
22. குடியரசு தலைவர் பதவிக்காலம்?
5 ஆண்டுகள்.
23. துணை குடியரசு தலைவர் பதவிக்காலம்?
5 ஆண்டுகள்.
24. மாநிலங்களவையில் தலைவராக பணியாற்றுபவர்?
துணை குடியரசு தலைவர்.
25. அரசியலமைப்பின் அதிகார வரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் வகிப்பவர்?
துணை குடியரசு தலைவர்.
26. குடியரசு தலைவர் செயல்படாத நிலையில் குடியரசு தலைவராக செயல்படுபவர்?
துணை குடியரசு தலைவர்.
27. குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பது?
மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள்.
28. துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பது?
மக்களவை, மாநிலங்கள் அவை உறுப்பினர்கள்.
29. மத்திய அமைச்சரவை ஆலோசனை படி செயல்படுபவர்?
குடியரசு தலைவர்.
30. பிரதமரின் ஆலோசனைபடி மத்திய அமைச்சர்களை நியமிப்பவர்?
குடியரசு தலைவர்.
31. குடியரசு தலைவரால் பிரதமராக நியமிக்கப்பட வேண்டியவர் எதை பெற்றிக்க வேண்டும்?
மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு பெறவேண்டும்.
32. குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் இல்லாதபோது குடியரசு தலைவர் பொறுப்பேற்பவர்?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.
33. உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர்?
குடியரசு தலைவர்.
34. மாநில ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்?
குடியரசு தலைவர்.
35. தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பவர்?
குடியரசு தலைவர்.
36. குடியரசு தலைவர் மக்களவையின் ஓர் உறுப்பினரா?
இல்லை.
37. குடியரசு தலைவர் மக்களவையின் உள்ளுறுப்பா?
ஆம் .
38. குடியரசு தலைவர் மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்?
இரண்டு உறுப்பினர்கள் ( ஆங்கிலோ இந்தியர்கள் ).
39. குடியரசு தலைவர் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமிக்க முடியும்?
12 உறுப்பினர்களை.
40. பாராளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் உரையாற்றுவார்?
குடியரசு தலைவர்.
41. குடியரசு தலைவருக்கு அவரச சட்டங்களை இயற்றும் அதிகாரங்களை வழங்கும் ஷரத்து?
ஷரத்து - 123.
42. மரணதண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் உள்ளவர்?
குடியரசு தலைவர்.
43. குடியரசு தலைவர் பிறப்பிக்கும் அவரச காலச் சட்டத்திற்கான கால வரையறை?
6 வாரங்கள்.
44. பாராளுமன்றத்தின் ஆண்டு முதல் கூட்டத்தில் உரையாற்றுவார்?
குடியரசு தலைவர்.
45. மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பவர்?
குடியரசு தலைவர்.
46. நிதிக்குழுவை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்?
குடியரசு தலைவர்.
47. மக்களவைக்கு 2 ஆங்கிலோ இந்தியர்களை நியமிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் வழங்கும் ஷரத்து?
ஷரத்து - 331.
48. அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகப்படுத்தும் முன்பு யாருடைய முன் அனுமதி தேவை?
குடியரசு தலைவர்.
49. பண மசோதா அறிமுகப்படுத்தும் முன்பு யாருடைய முன் அனுமதி தேவை?
குடியரசு தலைவர்.
50. இந்தியாவில் அவரசகால நெருக்கடிநிலையை அறிவிக்கும் அதிகாரம் உடையவர்?
குடியரசு தலைவர்.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment