####அறிவோம்####
முக்கிய வினாவிடை | பொது தமிழ் | 7 வகுப்பு உரைநடை 1
முக்கிய வினாவிடை | பொது தமிழ்
7 வகுப்பு, உரைநடை
1. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார் அவர்கள் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்?
80.
2. எந்த நண்பர் குடும்பம் தொடர்பாக மீனாட்சி சுந்தரனார் அவர்கள் கும்பகோணத்திற்கு பத்திரத்தில் சாட்சி கையொப்பமிட சென்றார்?
ஆறுமுகம்.
3. "மூன்றாவது தெரு" என்ற வரியில் மூன்றாவது என்னும் சொல்லானது எந்த பொருளை குறிக்கிறது?
சுண்ணாம்பு.
4. "நோய்க்கு மருந்து இலக்கியம்" என்று கூறியவர் யார்?
மீனாட்சி சுந்தரனார்.
5. மீனாட்சிசுந்தரனார் இறந்த ஆண்டு எது?
1876.
6. மீனாட்சி சுந்தரனார் அவர்கள்--------------பாடுவதில் வல்லவர்?
தலபுராணம்.
7. "நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன்" எனக் கூறிய கவிஞர் யார்?
இரசூல் கம்சதேவ்.
8. "சொல்ல துடிக்குது மனசு" என்ற நூலை எழுதியவர் யார்?
வி.கே.டி.பாலன்.
9. "அறம் பெருகும் தமிழ் படித்தால். அகத்தில் ஒளி பெருகும்" என்ற பாடலை பாடிய கவிஞர் யார்?
பெருஞ்சித்திரனார்.
10. "அறம் பெருகும் தமிழ் படித்தால். அகத்தில் ஒளி பெருகும்" என்ற பாடலை பெருஞ்சித்தரனார் அவர்கள் எந்த நூலில் பாடியுள்ளார்?
பள்ளிப் பறவைகள்.
11. "தொப்புள் கொடி உறவுகள் அறுந்து போகாமல் காப்பது தாய்மொழி மாத்திரமே என்று கூறிய ஆசிரியர் யார்?
வி.கே.டி.பாலன்.
12. இரசூல் கம்சதேவ் என்பவர் எந்த நாட்டைச் சேர்ந்த அறிஞர் ஆவார்
இரஷ்யா கவிஞர்.
13. கோவூர்கிழார் அவர்கள் எந்த தலைநகர் அருகிலுள்ள ஊரில் பிறந்தார்?
உறையூர்.
14. கோவூர்கிழார் அவர்கள் எந்த மரபில் பிறந்தவர் ஆவார்?
வேளாளர்.
15. எந்த நூலில் மட்டும் கோவூர்கிழாரின் பாடல்கள் இடம் பெறவில்லை?
அகநானூறு.
16. நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, திருவள்ளுவமாலை ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ள கோவூர்கிழாரின் பாடல்கள் மொத்தம் எத்தனை?
18 பாடல்கள்.
17. கோவூர்கிழார் அவர்களை அழைத்து அரசு அவைகளை தலைவராகிய சோழ மன்னர் யார்?
நலங்கிள்ளி.
18. நலங்கிள்ளி என்ற மன்னன் எந்த நகரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டு வந்தான்?
உறையூர்.
19. "இவர் அஞ்சாநெஞ்சர், யார் தவறு செய்தாலும் அதனை சுட்டிக்காட்டி முறையாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இனிமையாக சொல்லி திருத்துவதில் வல்லவர்" இக்கூற்றில் சுட்டி கட்டப்படுபவர் யார்?
கோவூர் கிழார்.
20. சோழர் மரபில் தோன்றிய நலங்கிள்ளிக்கும் யாருக்கும் நெடுங்காலம் பகைமை இருந்து வந்ததாக கூறப்படுகிறது?
நெடுங்கிள்ளி.
21. நலங்கிள்ளியின் படையினர் உறையூருக்கு அருகில் உள்ள எந்த கோட்டையை முற்றுகையிட்டனர்?
ஆவூர் கோட்டை.
22. பனம்பூ - சேரன்
வேப்பம்பூ - பாண்டியன்
அத்திப்பூ - சோழன்
23. கோவூர் கிழாரின் அறிவுரையை கேட்டு உறையூர் கோட்டையை நலங்கிள்ளியிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறிய சோழ மன்னன் யார்?
நெடுங்கிள்ளி.
24. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்ற மன்னன் எந்த நகரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டு வந்தான்?
புகார்.
25. சோழ மன்னர்களில் சிறந்த கவிஞர் என்று பெயர் பெற்றவர் யார்?
கிள்ளிவளவன்.
26. எந்த மன்னன் புலவர்களுக்கு கொடையளித்து புகழ்பெற்று விளங்கினார்?
கிள்ளிவளவன்.
27. மலையமான் திருமுடிக்காரியின் இரு பிள்ளைகளையும் தன் பட்டத்து யானையின் காலால் இடறிக் கொல்ல முடிவு செய்த சோழ மன்னன் யார்?
கிள்ளிவளவன்.
28. எந்த மரபில் வந்த மன்னர்கள் புறாவுக்கு வந்த துன்பத்தையும், பசுவுக்கு உற்ற துயரத்தையும் நீக்கினார்?
சோழர்.
29. சோழன் நெடுங்கிள்ளி உறையூர் தலைநகரில் இருந்து பொழுது அவரை பாடி பரிசு பெற அங்கு சென்று சிறையில் அடைக்கப்பட்ட புலவர் யார்?
இளந்தத்தனார்.
30. "குறள்நெறி இலக்கிய இலக்கியக் கதைகள்" என்ற நூலை எழுதியவர் யார்?
சே.சுந்தரராசன்.
31. போர் செய்யப் புறப்படுவதற்கு முன்பாக அரசன். தன் அரண்மனையில் வீரர்களுக்கு பெருவிருந்து அளிக்கும் நிகழ்ச்சியானது---------------எனப்படும்?
பெருஞ்சோறு அளித்தல்.
32. திருச்சிராப்பள்ளி நகரமானது காவேரி ஆற்றின் எந்தக் கரையில் அமைந்துள்ளது?
தென்கரை.
33. எந்த நகரமானது கோவில்களும் நினைவுச்சின்னங்களும் நிறைந்துள்ள வரலாற்று நகரம் என்று கூறப்படுகிறது?
திருச்சிராப்பள்ளி.
34. திருச்சிராப்பள்ளிநகரத்தின் பழம்பெருமைக்கு சான்றாக திகழ்வது எது?
மலைக்கோட்டை.
35. மலைக்கோட்டையில் எந்த மன்னர் காலத்துச் சிற்பங்களானது காண்போரை கவரும் தன்மையுடையதாக அமைந்துள்ளது?
பல்லவர்.
36. முற்காலத்தில் சோழர்களின் எந்த நகரமானது கோழிமாநகரம் என்று அழைக்கப்பட்டது?
உறையூர்.
37. தொன்மைக்காலத்தில் திருச்சிராப்பள்ளி என்னும் மாநகரம் எவ்வாறாக அழைக்கப்பட்டது?
திரிசிரபுரம்.
38. திருச்சியில் எத்தனை ஆண்டு பழைமை வாய்ந்த கவின்மிகு கல்லணையானது காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
ஈராயிரம்.
39. தமிழகத்தின் எந்த கல்லணையானது பண்டையத் தமிழரின் நீர் மேலாண்மைச் சிந்தனயின் சிகரம் என்று கூறப்படுகிறது?
கல்லணை.
40. தாயுமானவருக்கு ஞானநெறி காட்டிய மெளனகுருவும், தமிழின் முதல் சிறுகதை எழுத்தாளரான வ.வே.சுப்பிரமணியம் பிறந்த மண் எது?
திருச்சி.
41. "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே" எனத் தொடங்கும் பாடலானது இடம்பெற்றுள்ள நூல்?
புறநானூறு.
42. "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே" எனத் தொடங்கும் புறநானூறு பாடலை பாடியவர் யார்?
பொன்முடியார்.
43. கோவூர்கிழாரின் பாடல்கள் எந்த நூலில் அதிகபட்சமாக 15 பாடல்களாக இடம் பெற்றுள்ளது?
புறநானூறு.
44. கோவூர்கிழார் எந்த மன்னர்களை பற்றி அதிகமாக பாடியுள்ளார்?
சோழர்.
45. கோவூர்கிழார் பற்றி போரைத் தவிர்த்த புலவர். மலையமான் பிள்ளைகளைத் காத்தல், இளந்தத்தனார்ச் சிறைமீட்ட செம்மல், ஆகிய நிகழ்ச்சிகளானது எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
புறநானூறு.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment