####அறிவோம்####
முக்கிய வினாவிடை | பொது தமிழ் | 7 வகுப்பு உரைநடை 2
முக்கிய வினாவிடை
பொது தமிழ்
7 வகுப்பு உரைநடை - 2
1. இராமானுஜம் அவர்கள் தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?
ஈரோடு.
2. இராமானுஜம் அவர்கள் பிறந்ததிலிருந்து எத்தனை ஆண்டு காலம் வரை பேசும் திறன் அற்றவராக இருந்தார்?
மூன்றாண்டுகள்.
3. இராமானுஜர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரில் உள்ள திண்ணைப் பள்ளி ஒன்றில் படித்தார்?
காஞ்சிபுரம்.
4. தன் தாய் கோமளத்தின் தந்தையார் பணியின் காரணமாக கீழ்கண்ட இந்த ஊருக்கு குடியேறினார்?
கும்பகோணம்.
5. 1850ம் ஆண்டில் கார் என்பவர் எத்தனையாவது வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்?
15.
6. 1880 கார் என்னும் கணிதவியல் அறிஞர் அவர்கள் எந்த நகரத்தைச் சேர்ந்தவர்?
இலண்டன்.
7. இராமானுஜம் அவர்கள் எந்த அறிஞர் போன்று 15 வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கினார்?
கார்.
8. யாருடைய முயற்சியினால் இராமானுஜம் அவர்கள் துறைமுகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார்?
தந்தை.
9. இராமானுஜம் அவர்களுக்கு தன் தந்தை மூலமாக எந்த துறைமுகத்தில் எழுத்தர் பணியானது கிடைத்தது?
சென்னை.
10. இராமானுஜம் அவர்கள் தாம் கண்டுபிடித்த தேற்றங்களையும், எடுகோள்களையும் வினாக்களாக தொகுத்து எவற்றிற்கு அனுப்பினார்?
இந்திய கணித கழக பத்திரிக்கை.
11. தாம் கண்டுபிடித்த தேற்றங்களையும், எடுகோள்களையும் வினாக்களாக தொகுத்து யார் உதவியுடன் இந்திய கழக பத்திரிகைக்கு அனுப்பினார்?
பிரான்சிஸ் ஸ்பிரிங்.
12. இராமானுஜம் அவர்கள் எழுதிய தேற்றங்கள் மற்றும் எடுகோள்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு எந்த பெயர் மூலம் இந்திய கணித கழக பத்திரிக்கையால் கட்டுரையாக வெளியிடப்பட்டது?
பெர்னெளலிஸ் எண்கள்.
13. இராமானுஜம் அவர்கள் துறைமுகத்தில் ஊதியமில்லா விடுப்பு எடுத்துக்கொண்டு எந்த பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார்?
சென்னை பல்கலைக்கழகம்.
14. பல்கலைக்கழகத்தில் இராமானுஜர் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்த பிறகு தம்முடைய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் ஆகியவற்றை விவரமாக எழுதி யாருக்கு கடிதமாக அனுப்பினார்?
ஹார்டி.
15. இராமானுஜர் அவர்கள் கடிதம் அனுப்பும் போது ஹார்டி அவர்கள் எந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்?
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்.
16. ஹார்டி அவர்கள் பேராசிரியராக பணியாற்றிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமானது எந்த நாட்டில் அமைந்துள்ளது?
இங்கிலாந்து.
17. எந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஈ.எச்.நெவில் அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்திற்கு சொற்ப்பொழிவாற்ற வந்தார்?
திரினிட்டி கல்லூரி.
18. ஹார்டி அவர்கள் இராமானுஜத்தை இங்கிலாந்திற்கு அழைத்தார் என்ற செய்தியை இராமானுஜம் அவர்கள் யார் வாயிலாக அறிந்து இங்கிலாந்து செல்ல முடிவெடுத்தார்?
ஈ.எச்.நெவில்.
19. இராமானுஜம் அவர்கள் இங்கிலாந்துக்கு கப்பல் மூலம் புறப்பட்ட ஆண்டு?
17/03/1914.
20. இராமானுஜம் அவர்கள் திரினிட்டி கல்லூரியில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்த நாள்?
18/04/1914.
21. இராமானுஜத்தின் கணிதத்திறமையைக் கண்டு திரினிட்டி கல்லூரியானது அவருக்கு எத்தனை நாட்களுக்கு அறுபது பவுண்டு உதவித் தொகையானது வழங்கியது?
ஓராண்டிற்கு.
22. எந்த கணித பேராசிரியர் அவர்கள் கேம்பிரிட்ஜ் மாணவர்களுக்கு சிறப்புக் கணிதம் நடத்திக் கொண்டிருந்தார்?
ஆர்தர்பெர்சி.
23. பேராசிரியர் ஆர்தர்பெர்சி அவர்கள் எந்த கல்லூரியை சார்ந்தவர்?
கிங்ஸ் கல்லூரி.
24. ரோஸர்ஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டு இராமானுஜத்திற்கு பெருமை சேர்த்தவர்?
ஹார்டி.
25. இராமானுஜத்தின் திறமையை அறிந்த எந்த பல்கலைக்கழகமானது அவருக்கு எஃப்.ஆர்.எஸ் பட்டத்தை வழங்கியது?
இங்கிலாந்து பல்கலைக்கழகம்.
26. எந்த ஆண்டு இராமானுஜத்திற்கு எஃப்.ஆர்.எஸ் பட்டம் வழங்கப்பட்டது?
1918.
27. ஒருவரது திறமைகள் பிறர் வியக்கத்தக்க வகையில் இருந்தால் அவருக்கு எந்த பட்டமானது வழங்கப்படுகிறது?
எஃப்.ஆர்.எஸ் பட்டம்.
28. எஃப்.ஆர்.எஸ் பட்டம் பெற்ற இராமானுஜத்தை திரினிட்டி கல்லூரி பாராட்டி எந்த பதவியை அளித்து சிறப்பித்தது?
கல்விக்குழுவின் சிறப்பு உறுப்பினர்.
29. எஃப்.ஆர்.எஸ் பட்டம் பெற்ற இராமானுஜத்தை பாராட்டி திரினிட்டி கல்லூரியானது அவருக்கு எத்தனை பவுண்டு தொகையை அளிக்க ஏற்பாடு செய்தது?
250 பவுண்டு.
30. இராமானுஜம் அவர்களுக்கு 250 பவுண்டு தொகையை திரினிட்டி கல்லூரியானது எத்தனை ஆண்டுகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தது?
6 ஆண்டுகள்.
31. யாருடைய பரிந்துரையின் பேரில் இராமானுஜத்திற்கு 250 பவுண்டு தொகையை அளிக்க சென்னை பல்கலைக்கழகம் முன்வந்தது?
ஹார்டி.
32. சென்னை பல்கலைக்கழகமானது 250 பவுண்டு தொகையை இராமானுஜத்திற்கு எத்தனை ஆண்டுகளுக்கு வழங்க முன்வந்தது?
5 ஆண்டுகள்.
33. சென்னை பல்கலைக்கழகம் கொடுக்க முன்வந்த 250 பவுண்டு தொகையில் 50 பவுண்டு தொகையை யாருக்கு வழங்கி வருமாறு இராமானுஜம் கடிதம் எழுதினார்?
பெற்றோர்.
34. சென்னை பல்கலைக்கழகம் கொடுக்க முன்வந்த 250 பவுண்டு தொகையில் 200 பவுண்டு தொகையை யாருக்கு வழங்கி வருமாறு இராமானுஜம் கடிதம் எழுதினார்?
ஏழை எளிய மாணவர்களுக்கு.
35. இராமானுஜம் அவர்கள் எந்த நோயால் பாதிக்கப்பட்டார்?
காசநோய்.
36. இராமானுஜத்தை காசநோய் தாக்கி அவர் படுக்கையில் இருந்த போது அவரைக் காண வந்த ஹார்டியின் வாடகை மகிழுந்தின் எண் யாது?
1729.
37. எந்த எண் இருவகைகளிலே இரு கனங்களின் கூட்டுத்தொகையாக வரும் எண்களின் மிகச்சிறிய எண் என்று இராமானுஜம் குறிப்பிடுகிறார்?
1729.
38. இராமானுஜம் அவர்கள் எந்த நாளின் போது இங்கிலாந்தில் இருந்து மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப நினைத்து மும்பைக்கு கப்பலில் வந்து இறங்கினார்?
1919, மார்ச் 27.
39. இராமானுஜம் அவர்கள் இங்கிலாந்திலிருந்து மீண்டும் சென்னை வந்து சேர்ந்த ஆண்டு?
1919.
40. இராமானுஜம் அவர்களுக்கு எந்த ஆண்டு காசநோய் தாக்கியது?
1917.
41. கணிதமேதை இராமானுஜம் அவர்களின் பிறப்பு - இறப்பு ஆண்டுகள்?
1887 - 1920.
42. இராமானுஜம் அவர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்த பொது அவரின் வயது?
33 வயது.
43. "ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்த பட்சம் ஒரு ஜாகோபி" என்று இராமானுஜத்தை பாராட்டியவர் யார்?
லிட்டில்வுட்டு.
44. ஆய்லர் என்பவர் எந்த நாட்டை சேர்ந்த கணிதமேதை ஆவார்?
சுவிட்சர்லாந்து.
45. ஜாகோபி என்பவர் எந்த நாட்டை சேர்ந்த கணிதமேதை ஆவார்?
ஜெர்மனி.
46. ஆய்லர் என்பவர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்த கணிதமேதை?
18ம் நூற்றாண்டு.
47. ஜாகோபி என்பவர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்த கணிதமேதை?
19ம் நூற்றாண்டு.
48. கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தை பெற்ற பிறவிக்கணிதமேதை என்று இராமானுஜத்தை பாராட்டியவர் யார்?
இந்திராகாந்தி.
49. இராமானுஜன் சாதாரண மனிதன் அல்ல அவர் இறைவன் தந்த பரிசு என்று கூறியவர்?
பேரா ஈ.டி.பெல்.
50. இராமானுஜன் முதல் தரமான கணிதமேதை என்று கூறியவர் யார்?
லார்ட்மெண்ட் லெண்ட்.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment