####அறிவோம்####
முக்கிய வினா பொது தமிழ் 7ம் வகுப்பு உரைநடை
முக்கிய வினா பொது தமிழ்
1. எளிதில் பேசவும் எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்று கூறியவர்?
வள்ளலார்.
2. உலக மொழிகளில் சிறந்தது எந்த மொழி என்று அறிஞர்கள் கூறுகின்றனர்?
தமிழ் மொழி.
3. திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் ------------------ எனப்படும்?
செம்மொழி.
4. கிரேக்கம், இலத்தீன், சம்ஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகிய மொழிகள் செம்மொழிகள் என பட்டியலிட்டவர் யார்?
ச.அகத்தியலிங்கம்.
5. தற்போது பேச்சு வழக்கில் இல்லாத மொழிகள் என கூறப்பட்ட மொழிகளில் தவறானது?
ஈப்ரு.
6. செவ்வியல் இலக்கியங்கள் என கூறப்படும் நூல்களில் தவறானது?
சீவகசிந்தாமணி.
7. "தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்" என்று கூறியவர் யார்?
டாக்டர் கிரெளல்.
8. "தமிழ் என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது" என்று கூறியவர்?
டாக்டர் கிரெளல்.
9. குமரிக்கண்டமானது எவற்றின் மிகப்பழைமையான நிலப்பகுதி?
உலகம்.
10. "ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
தண்டியலங்காரம்.
11. பெற்றோரைக் குறித்தும் அம்மை அப்பன் என்னும் சொற்களானது எந்த நாட்டு தமிழ் சொற்கள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
நாஞ்சில் நாடு.
12. தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறியவர் யார்?
கால்டுவெல்.
13. மக்களுக்கு ஒழுக்க வரம்பு தேவையானது போலவே மொழிக்கு எந்த வரம்பு இன்றியமையாதது என ஆசிரியர் கூறுகிறார்?
இலக்கண வரம்பு.
14. கீழ்க்கண்ட எந்த சங்கத்திலிருந்து இசையும் நாடகமும் இயற்றமிழோடு இணைந்து முத்தமிழ் என விளங்கி வரலாயிற்று என்று ஆசிரியர் கூறுகிறார்?
முதற்சங்கம்.
15. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
தண்டியலங்காரம்.
16. கீழ்கண்டவற்றில் ஒருமை பன்மை என்னும் இருவகை எண் மட்டும் காணப்படும் மொழி எது?
தமிழ் மொழி.
17. கீழ்க்கண்டவற்றில் ஒருமை பன்மை இருமை என மூவகை எண்கள் உள்ள மொழி எது?
வடமொழி.
18. எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் கூறும் அவற்றுடன் கூடி வாழ்வியலுக்கான பொருள் இலக்கணத்தையும் கூறும் நூல் எது?
தமிழ் மொழி.
19. பண்டைய தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களும் கீழ்கண்ட எந்த வடிவில் இருந்ததாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்?
செய்யுள் வடிவில்.
20. கீழ்க்கண்டவற்றில் வேறு எந்த மொழிகளிலும் காணப்படாத செய்யுள் வகை எது?
கலிப்பா.
21. புலவர்கள் செய்யுளுக்கு சிறப்பு சேர்க்க கீழ்கண்ட இந்த இரு அணிகளையும் பயன்படுத்தி பாடல்களை இயற்றி உள்ளார்கள்?
உவமை, உருவகம்.
22. தமிழ்மொழியில் கீழ்கண்ட எவற்றுக்கு மட்டுமே பால்வேறுபாடு உண்டு என்று கூறப்படுகிறது?
உயிர்கள்
23. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழ் மக்கள், தம் குடியிருப்புப் பகுதிகளை கீழ்க்கண்ட எந்த பெயரால் குறித்தனர்?
ஊர்.
24. கீழ்க்கண்ட எந்த நாட்டின் அருகே ஊர் என்னும் பெயரில் ஒரு நகரமும், ஊர்நம்மு என்னும் ஊரும் உள்ளதாக கூறப்படுகிறது?
பாபிலோன்.
25. கீழ்க்கண்டவற்றில் குறிஞ்சி நில மக்களை பற்றிக் கூறியவற்றில் தவறானது எது?
குறிஞ்சி மலை மக்கள் மலையில் இருந்து பிற இடங்களுக்கு சென்று தங்கிய போது அங்குள்ள நிலப்பெயரையே பெயர் வைத்துக் கொண்டு வாழ்ந்தனர்.
26. அத்தி மரங்கள் சூழ்ந்த ஊரானது கீழ்க்கண்ட எந்த பெயரால் அழைக்கப்பட்டது?
ஆர்க்காடு.
27. காளிப்பட்டி, சிறுகூடல்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய ஊர்களானது கீழ்க்கண்ட எந்த நிலத்தை சார்ந்த ஊர்களை குறிக்கின்றது?
முல்லை நில ஊர்கள்.
28. நிலவளமும், நீர்வளமும், பயிர் வளமும் செறிந்த பகுதியானது ---------------- பகுதி என அழைக்கப்படுகிறது?
மருதம் நில ஊர்கள்.
29. கீழ்க்கண்ட எந்த நிலத்தைச் சார்ந்த ஊர்களில் பொங்கிப் பெருகி வழிந்தோடி வளங்கூடிய ஆறும், அதன் கரையில் இருந்த உயர்ந்த மரங்களும் ஊர்ப்பெயர்களில் கலந்து நிலைத்தன?
மருத நில ஊர்கள்.
30. புளியமரங்கள் அடர்ந்த பகுதியில் அழைக்கப்பட்ட மரப்பெயர் தொகுப்பு பெயர்களில் கீழ்கண்டவற்றில் தவறானது எது?
புளியனூர்.
31. சீவலப்பேரி, மாங்குளம், வேப்பேரி ஆகிய ஊர்கள் கீழ்கண்ட இந்த நிலத்தை சார்ந்த ஊர்கள் ஆகும்?
மருதம்.
32. பழங்காலத்தில் கடற்கரையில் உருவான பேரூர்கள் ---------------------என அழைக்கப்பட்டன?
பட்டினம்.
33. பழங்காலத்தில் கடற்கரையில் உருவான சிற்றூர்களானது -------------------- என அழைக்கப்பட்டன?
பாக்கம்.
34. நெடிய கடற்கரையை உடைய தமிழகத்தின் பகுதியில் கீழ்க்கண்ட யார் வாழ்ந்த ஊர்கள் இருந்ததாக கூறப்படுகிறது?
பரதவர்.
35. வடக்கே அமைந்த ஊர்ப்பகுதியை முற்காலத்தில் எவ்வாறு அழைத்தனர்?
வடபழஞ்சி.
36. நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாகப் பிரித்து தன் ஆளுகைக்கு உட்படுத்தினார்கள்?
72.
37. கல்வெட்டுகளில் காணப்படும் மதிரையானது கீழ்கண்டவற்றில் எவ்வாறாக திரிந்து மதுரை என மாறியுள்ளது?
மருதை.
38. ஆத்தூர் -
மருதநில ஊர்
கீழக்கரை -
நெய்தல் நில ஊர்
சின்னகொல்லப்பட்டி -
முல்லை நில ஊர்
மேட்டுப்பாளையம் -
நாயக்க மன்னர்கள்.
39. இந்திய விடுதலைக்கு தென்னகத்தில் இருந்து அந்நியரை எதிர்த்து சிறந்த வீரரான புலித்தேவன் அவர்கள் கீழ்கண்ட ஏந்த வயதிலேயே மற்போர், சிலம்பம், வாள்வீச்சு என்ற வீரக்கலைகள் எல்லாம் கற்றுத்தேர்ந்திருந்தார்?
12.
40. ஆடு, மாடுகள் அடைக்கப்படும் இடமானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பட்டி.
41. "
யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தவர் யார்?
உ.வே.சாமிநாதர்.
42. கீழ்க்கண்டவற்றில் யார் தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்டார்?
உ.வே.சாமிநாதர்.
43. உ.வே.சா அவர்களின் ஆசிரியர் பெயர் யாது?
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.
44. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் எந்த ஆண்டில் பிறந்தார்?
1815.
45. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் பிறந்த ஊர் யாது?
எண்ணெய்கிராமம்.
46. மீனாட்சிசுந்தரனார் அவர்களுக்கு கீழ்கண்டவற்றுள்------------- என்ற வேட்கை தணியாததாக இருந்தது?
கற்க வேண்டும்.
47. மீனாட்சிசுந்தரனார் அவர்களிடம் படித்த குறிப்பிட்ட மாணவர்களில் தவறான மாணவர் யார்?
குலாம் காதர் நாவலர்.
48. கீழ்க்கண்ட எந்த ஊரில் ஆதீன வித்துவானாக மீனாட்சி சுந்தரனார் அவர்கள் சில காலம் பணியாற்றி இருந்தார்?
திருவாவடுதுறை.
49. எந்த ஊரில் மீனாட்சி சுந்தரனார் அவர்கள் ஆதீன வித்துவானாக வாழ்ந்திருந்த காலத்தில் உ.வே.சாமிநாதனுக்கு ஆசிரியராக இருந்தார்?
திருவாவாடுதுறை.
50. மீனாட்சி சுந்தரனார் அவர்கள் தம்வாழ்வின் பெரும்பகுதியை-----------------செலவழித்தார்?
கற்ப்பிப்பதில்.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment