####அறிவோம்####
முக்கிய வினா விடை - இந்திய அரசியல் நிர்ணய சபை
இந்திய அரசியல் நிர்ணய சபை
முக்கிய வினா விடை
1. அடிப்படை உரிமைகள் பற்றி குறிப்பிடுவது?
பகுதி - 3.
2. அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கோட்பாடுகள் பற்றிக் குறிப்பிடுவது?
பகுதி - 4.
3. ஒன்றியம் ( யூனியன் ) பற்றிக் குறிப்பிடுவது?
பகுதி - 5.
4. மாநிலங்கள் பற்றிக் குறிப்பிடுவது?
பகுதி - 6.
5. யூனியன் பிரதேசங்கள் பற்றிக் குறிப்பிடுவது?
பகுதி - 8.
6. பஞ்சாயத்து ராஜ்ய அமைப்புகள் பற்றிக் குறிப்பிடுவது?
பகுதி - 9.
7. நகராட்சிகள் பற்றிக் குறிப்பிடுவது?
பகுதி - 9A.
8. அவரசகால நெருக்கடிநிலை பற்றிக் குறிப்பிடுவது?
பகுதி - 18.
9. திருத்தங்கள் பற்றிக் குறிப்பிடுவது?
பகுதி - 20.
10. இந்தியாவை பாரதம் என்று குறிப்பிடும் ஷரத்து?
ஷரத்து 1.
11. நில ஆக்கிரமிப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை?
9வது அட்டவணை.
12. 52வது திருத்தத்தின் போது இணைக்கப்பட்ட அட்டவணை?
10வது அட்டவணை.
13. 10வது அட்டவணை இணைக்கப்பட்ட ஆண்டு?
1985.
14. முதல் திருத்தத்தின் போது இணைக்கப்பட்ட அட்டவணை?
9வது அட்டவணை.
15. 1951ஆம் ஆண்டு புதியதாக இணைக்கப்பட்ட அட்டவணை?
9வது அட்டவணை.
16. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத் தலைப்புக்கள் குறித்து குறிப்பிடும் அட்டவணை?
11வது அட்டவணை.
17. நகராட்சி அமைப்பிகளின் அதிகாரங்கள் பற்றிக் குறிப்பிடும் அட்டவணை?
12வது அட்டவணை.
18. 1993இல் 74வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை?
12வது அட்டவணை.
19. 1992இல் 73வது திருத்தத்தின்போது இணைக்கப்பட்ட அட்டவணை?
11வது அட்டவணை.
20. கட்சித்தாவல் தகுதியிழப்பு குறித்த விதிகள் அடங்கிய அட்டவணை?
10வது அட்டவணை.
21. நகராட்சி அமைப்புகளின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை?
18.
22. பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரப் பட்டியலில் உள்ள தலைப்புகளின் எண்ணிக்கை?
29.
23. மக்கள் உரிமை பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1955.
24. தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1955.
25. 1955ஆம் சட்டத்தின்படி குடியுரிமை நீக்கப்பெறுவதற்கான வழிமுறைகள் எத்தனை?
மூன்று.
26. சட்டத்தின்படி ஆட்சி என்பது பற்றிக் குறிப்பிடுவது?
ஷரத்து 14.
27. குடியுரிமை பெற 1955ஆம் ஆண்டு சட்டத்தில் உள்ள வழிகளின் எண்ணிக்கை?
ஐந்து.
28. இந்திய குடியுரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1955.
29. சாதி, சமயம், இனம், பால், பிறப்பிடம் காரணமாக வேறுபாடு காட்டப்பட்டக்கூடாது என்று குறிப்பிடுவது?
ஷரத்து 15.
30. பதிவு முறை மூலம் குடியுரிமை பெற இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும்?
5 ஆண்டுகள்.
31. குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு?
பாராளுமன்றம்.
32. தீண்டாமை ஒழிப்பு குறித்து குறிப்பிடும் ஷரத்து?
ஷரத்து 17.
33. வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்புரிமை என்று குறிப்பிடுவது?
ஷரத்து 16.
34. சிறப்பு பட்டங்களை தடை செய்யும் ஷரத்து?
ஷரத்து 18.
35. அடிப்படை சுதந்திரங்கள் பற்றி குறிப்பிடும் ஷரத்து?
ஷரத்து 19.
36. தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் உயிர் வாழும் உரிமை பற்றி குறிப்பிடுவது?
ஷரத்து 21.
37. கொத்தடிமை முறை ஒழிப்பு பற்றி குறிப்பிடுவது?
ஷரத்து 23.
38. 14 வயதுக்கு குறைவான நபர்கள் பணியில் அமர்த்தப்படக்கூடாது என்று குறிப்பிடும் ஷரத்து?
ஷரத்து 24.
39. சுரண்டலுக்கு எதிரான உரிமை என்பது?
ஷரத்து 23 மற்றும் ஷரத்து 24.
40. சமத்துவ உரிமை என்பது?
ஷரத்து 14 முதல் 18 வரை.
41. சுதந்திர உரிமை என்பது?
ஷரத்து 19 முதல் 22 வரை.
42. சமய உரிமை என்பது?
ஷரத்து 25 முதல் 28 வரை.
43. கல்வி மற்றும் கலாசார உரிமை என்பது?
ஷரத்து 29 மற்றும் 30.
44. ஷரத்து 35இன் கீழ் வழங்கப்படும் ஆணைகளின் எண்ணிக்கை?
ஐந்து.
45. மாநில நிர்வாகம் பற்றிய பகுதி?
பகுதி 6.
46. ஒன்றியம் மற்றும் அதன் பகுதிகளை குறிப்பிடுவது?
பகுதி 1.
47. குடியுரிமை பற்றி குறிப்பிடுவது?
பகுதி 2.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment