####அறிவோம்####
லோக்பால்
லோக்பால் என்பதற்கு மக்கள் காவலன் என்று பொருள்.
லோக்பால் என்ற வார்த்தையை முதலில் கூறியவர்
எல்.எம் .சிங்வி இவர் ஒரு சட்ட வல்லுநர் ஆவர்.
லோக்பால் மசோதாவை பார்லிமென்டில் நிறைவேற்ற முக்கிய காரணமாக இருந்தவர்
அன்னா ஹசாரே ஆவர்.
இது ஊழலுக்கு எதிரான சட்ட அமைப்பு.
மத்தியில் லோக்பால் எனவும் மாநிலத்தில் லோக் ஆயுக்தா எனவும் செயல்படும்.
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா
மசோதா டிசம்பர் 18, 2013ல் நிறைவேற்றப்பட்டது.
ஜனவரி 16, 2014ல் அமலுக்கு வந்தது.
லோக்பால் அமைப்பில்
ஒரு தலைவரும் 8 உறுப்பினரும் இருப்பார்கள்.
லோக்பால் அதிகார வரம்பிற்குள் பிரதமர் கொண்டு வரப்பப்பட்டுள்ளார்.
அனைத்து அரசு மற்றும் பொது ஊழியர்களும் இந்த சட்ட வரம்பில் வருவர்.
லோக்பால் சட்ட விதி 63ன்படி, சட்டம் அமலுக்கு வந்த 365 நாளுக்குள் மாநில சட்டசபையில் சட்டம் இயற்றி லோக் ஆயுக்தாக்களை கட்டாயம் அமைக்க வேண்டும்.
முதல் மாநிலமாக ஒடிசா லோக் ஆயுக்தாவை சட்ட சபையில் சட்டமாக இயற்றியது.
லோக்பால் மசோதாவின் முக்கிய கூறுகள்:-
மத்தியில் லோக்பால், மாநிலங்கள் நிலையில் லோக் ஆயுக்தா அமைப்பு தலைவர் மற்றும் அதிக பட்சமாக 8 உறுப்பினர்களை கொண்டது லோக்பால் அமைப்பு. இதன் உறுப்பினர்களில் பாதிப்பேர் நீதித்துறை சார்ந்தவர்கள்.
லோக்பால் உறுப்பினர்களில் 50 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மகளிராக இருக்கவேண்டும்.
பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தலைமை நீதிபதி அல்லது இந்திய தலைமை நீதிபதி நியமனம் செய்யும் உச்சநீதிமன்ற நீதிபதி, மற்றும் (தேர்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள முதல் 4 பேர் பரிந்துரையின்பேரில்) குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் சட்ட வல்லுநர் ஆகியோர் இடம்பெற்ற தேர்வுக்குழு வாயிலாக லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் நியமிப்பு.
லோக்பால் விசாரணை வரம்பில் பிரதமர்.
விசாரணை வரம்புக்குள் அரசு ஊழியர்களில் அனைத்துப் பிரிவினரும் வருவார்கள். ஒரு ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் அந்நிய நாட்டில் உள்ளவர்கள் மூலமாக நன்கொடை பெறும் எல்லோரும் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டுவரப்படுவர். நேர்மை, நாணயம் மிக்க ஊழி யர்களுக்கு உரிய பாதுகாப்பு
லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை சிபிஐ,உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கும்போது அதைக் கண்காணிக்க, மேற்பார்வையிட லோக்பாலுக்கு அதிகாரம். சிபிஐ இயக்குநரை பிரதமர் தலைமையிலான உயர் அதிகார குழு பரிந்துரைக்கும்.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரை பேரில்
சிபிஐ வழக்கு தொடுக்கும் பிரிவின் இயக்குநர் நியமிப்பு
லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் லோக்பால் ஒப்புதல் தந்தால் மட்டுமே பணியிடமாற்றம்.
ஊழல் வழியில் சேர்த்த சொத்துக் களை, வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பறிமுதல் செய்ய அதிகாரம் தரும் விதிமுறை கள் உள்ளடங்கும்.
ஆரம்ப நிலை விசாரணை, புலனாய்வு, வழக்கு விசாரணைக்கு கால நிர்ணயம், அதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் அதிகாரம்.
லோக்பால் சட்டமாக அறிவிக்கை செய்யப்பட்டதிலிருந்து 365 தினங்களுக்குள் மாநில சட்டப் பேரவையில் சட்டம் இயற்றி லோக் ஆயுக்தாக்களை அமைப்பது கட்டாயம்.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
வார்தா கல்வித் திட்டம் வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. சிறப்பு அம்சங்கள் அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
Comments
Post a Comment