####அறிவோம்####
சமூக அறிவியல் | 6 முதல் 10ம் வகுப்பு வரை | வினா விடை 1
சமூக அறிவியல்
6 முதல் 10ம் வகுப்பு வரை
வினா விடை 1
1. சமுதாயத்தை இணைக்கும் தொழில்?
பயிர்த்தொழில்.
2. இந்தியாவில் இக்காலத்தில் செயல்படும் உள்ளாட்சி அமைப்பை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியவர்?
ரிப்பன் பிரபு.
3. உள்ளாட்சி மன்றத்தலைவர் -----------------------ஆல் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
பகுதி உறுப்பினர்கள்.
4. சமுதாயத்தின் சரியான கூற்று?
தனிநபர், குடும்பம், சமூகம், சமுதாயம்.
5. குடியரசியல் குடிமக்கள் எல்லாரும்?
சம உரிமை உடையவர்கள்.
6. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்?
முத்துலெட்சுமி அம்மையார்.
7. முதல் பெண் கவர்னர்?
சரோஜினி நாயுடு.
8. ஒளவை இல்லம் என்பது?
கைவிடப்பட்ட விதவைக் பெண்கள் காப்பகம்.
9. நில அளவு அடிப்படையில் இந்திய உலகின் --------------- ஆவது பெரிய நாடக திகழ்கிறது?
ஏழாவது.
10. --------------- நாளில் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது?
26 ஜனவரி 1950.
11. இந்திய உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம்?
புதுதில்லி.
12. தேசியப்பாடல் வந்தே மாதரத்தை இயற்றியவர்?
பக்கிம் சந்திரசட்டர்ஜி.
13. நமது தேசிய மரம்?
ஆலமரம்.
14. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் -------------- தலைமையில் நடைபெற்றது?
Dr. சச்சிதானந்த சின்கா.
15. நமது அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்?
26 ஜனவரி 1950.
16. இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்?
குடியரசு தினம்.
17. இந்திய மக்களுக்கு முழு உரிமையையும் இந்திய ---------------------- வழங்கியுள்ளது?
அரசியலமைப்பு.
18. பாராளுமன்ற முறையில் அரசின் நிர்வாகக்குழுக்கு ------------------- பொறுப்பாகும்?
சட்டமன்றம்.
19. -------------- விழிப்புணர்வை அரசியல் கட்சிகள் உருவாக்குகின்றன?
அரசியல்.
20. இரு கட்சி முறை உள்ள நாடு?
அமெரிக்கா.
21. ----------------- மாநிலங்களில், மாநிலக்கட்சி என ஒப்புதல் பெற்ற கட்சிகள் தேசியக் கட்சிகள் ஆகும்?
நான்கு.
22. ------------------ மக்களாட்சியின் முதுகெலும்பாகச் செயல்படுகின்றன?
அரசியல் கட்சிகள்.
23. ஐ.நா. சபையின் தலைமையகம் ----------- நகரில் உள்ளது?
நியூயார்க்.
24. --------------- மனித இனப்பாராளுமன்றம் என்று அழைக்கப்படுகின்றது?
பொதுப் பேரவை.
25. ஐ.நா. வின் அலுவலக மொழிகளுள் ஒன்று?
பிரெஞ்சு.
Comments
Post a Comment