####அறிவோம்####
 
அறிவியல் | 6 முதல் 10ம் வகுப்பு வரை | வினா விடை பகுதி 2
 
அறிவியல்
6 முதல் 10ம் வகுப்பு வரை
வினா விடை பகுதி 2
1. டார்ச் விளக்கிற்கு தேவையான மின்னாற்றலை தருவது?
பசை மின்கலம்.
2. டங்ஸ்டன் ஆவியாகாமல் இருக்க பல்புகளில் நிரப்பப்படும் வாயு?
மந்த வாயுக்கள்.
3. டார்ச் விளக்கின் இயக்கம்?
வேதி ஆற்றல் மின்னாற்றலாக.
4. மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படும் சாதனம்?
மின் சலவைப் பெட்டி.
5. சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி போர்க்கப்பல்களை எரித்த அறிஞர்?
ஆர்க்கிமிடிஸ்.
6. ஆல்ஹால்களின் உறைநிலை?
-115'C.
7. ஒரு கலோரியின் மதிப்பு?
4.2 ஜூல்கள்.
8. ஆடிக்கு முன்னால் தோன்றுகிற பிம்பம்?
மெய்பிம்பம்.
9. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதால் ஏற்படுவது?
சந்திர கிரகணம்.
10. இரு குவிய கண்ணாடியைக் கண்டுபிடித்தவர்?
பெஞ்சமின் பிராங்களின்.
11. உலக விண்வெளி ஆண்டாக கொண்டாடப்படும் ஆண்டு?
2009.
12. ஒளியின் திசை வேகத்தைக் கண்டறிந்தவர்?
மைக்கல்சன்.
13. திரையில் உருவாக்க இயலாத பிம்பம்?
மாய பிம்பம்.
14. அதிர்வெண்ணின் அலகு?
ஹெர்ட்ஸ்.
15. கடலின் ஆழத்தை அறியப் பயன்படும் கருவி?
சோனார்.
16. காந்த பாயத்தின் அலகு?
வெபர்.
17. தற்காலிக காந்தம் செய்யப் பயன்படுவது?
தேனிரும்பு.
18. ஹைட்ரஜன் அணுவின் நியூட்ரஜன்களின் எண்ணிக்கை?
0.
19. மரபு சாரா ஆற்றல்களுக்கு எடுத்துக்காட்டு?
சூரிய ஆற்றல்.
20. இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் கதிர்கள்?
அகச்சிவப்பு கதிர்கள்.
21. எக்ஸ் கதிர்கள் ஊடுருவாத பொருட்கள்?
காரீயம்.
22. ஹைட்ரஜன் குண்டு எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?
அணுக்கரு இணைவு.
23. கியூரி தம்பதியினரால் கண்டறியப்பட்ட கதிரியக்க தனிமங்கள் முறையே?
பொலோனியம், ரேடியம்.
24. டிராம்பே அணு ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள உலைகள்?
அப்சரா, சைரஸ், ஜெர்லினா, பூர்ணிமா, துருவா.
25. 1901இல் ராண்டஜனுக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது?
எக்ஸ் கதிர் கண்டுபிடிப்பிற்கு.
 
 
 
 
 
 
 
Popular posts from this blog
 இலக்கண குறிப்பு       தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும்.     • எழுத்து இலக்கணம்   • சொல் இலக்கணம்   • பொருள் இலக்கணம்   • யாப்பு இலக்கணம்   • அணி இலக்கணம்        இலக்கண குறிப்பு  :     1. நீரோசை                ஆறாம் வேற்றுமைத் தொகை  2. பழகு, பாட்டு - வினைத்தொகை  அரைத்திடும் சேனை       -  எதிர்காலப் பெயரெச்சம்  வன்கானகம்  -  பண்புத்தொகை  போந்து  -  வினையெச்சம்  வன்தூறு  -  பண்புத்தொகை  பறித்தமயிர்  -  பெயரெச்சம்  நுண்டுளி  -  பண்புத்தொகை  மென்குறள்  -  பண்புத்தொகை  ஆடுக  -  வியங்கோள் வினைமுற்று  தானதர்மம்  -  உம்மைத்தொகை  அமைந்த, கொடுத்த  -  பெயரெச்சம்  புதுக்குநாள்  -  வினைத்தொகை  தண்கடல்  -  பண்புத்தொகை  செங்கதிர்  -  பண்புத்தொகை  காகிதப்பூ  -  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை  புருவக்கொடி  -  உருவகம்  இணையிலாப் பசுமை  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  வான்மழை  -  ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை  உதைத்த  -  பெயரெச்சம்  கட்டும்  -  செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்  நிழல் ...
 
 
 
 
 
 வலஞ்சுழி எழுத்துகள்       அ, எ, ஔ, ண, ஞ      இடஞ்சுழி எழுத்துகள்     ட, ய, ழ   
 
 
 
 
 
 வார்தா கல்வித் திட்டம்                                             வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது.    சிறப்பு அம்சங்கள்                                         அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல...
 
 
 
 
 
 
  
Comments
Post a Comment