####அறிவோம்####
அரசியலமைப்பு
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அரசியலமைப்பை பெற்றிருக்க வேண்டும் அரசியல் அமைப்பின்றி ஒரு நாட்டினை ஆட்சி செய்வது இயலாத காரியம். ஒரு சில விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் பல நாடுகளில் இருந்திருக்கின்றன என்பதனை வரலாறு மூலம் நாம அறிகிறோம். சீரான அமைதியான நாட்டினை உருவாக்க இவைகள் வேண்டும் என்பது தெரியவருகிறது.
குழப்பமின்றி சிறப்பாக ஆட்சி செய்ய அரசியலமைப்பு இன்றியமையாதது. ஜனநாயக நாடு அல்லது சர்வாதிகார நாடாக இருந்தாலும் அதை நிர்ணயிக்க ஒரு சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை ஒவ்வொரு நாடும் ஏற்றுக் கொள்கிறது. தற்பொழுது விதிமுறைகள் எல்லாம் அரசியலமைப்பு என்ற அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் அறிதல் வேண்டும்.
அரசியலமைப்பின் பொருளும் விளக்கமும்
ஒரு நல்ல அரசாங்கத்தின் அமைப்பும் அதன் அதிகாரமும் அரசியலமைப்பின் நிலையை உணர்த்துவதாக அமையும். நற்குடிமகனின் உரிமைகளும், கடமைகளும் அரசியலமைப்பை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் ஆவணம் என அரசியலமைப்பை கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. அரசியலமைப்பு என்பது எழுதப்பட்டிருக்கலாம் அல்லது எழுதப்படாமலும் செயல்படுத்தப்படலாம் என உணர வேண்டும். சில நேரங்களில் அரசியலமைப்பு நெடுங்காலமாக பின்பற்றப்படும் விதிகளும், பழமொழிகளும் நடைமுறைகளும் கொண்டு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என கருதப்படுகிறது.
ஒரு அரசியலமைப்பு என்பது:-
நாட்டின் ஆதாரச்சட்டமாகும். எழுதப்பட்டோ அல்லது எழுதப்படாமலோ இருக்கலாம். அரசாங்கத்தின் அமைப்பு மற்றும் அதிகாரத்தை விவரிக்கின்றது.
குடிமக்களின் உரிமையை கூறுகின்றது. ஆளப்படுவோருக்கும், அரசாங்கத்திற்கும் இடையே உள்ள உறவை பற்றிக் குறிப்பிடுகின்றது.
இதுவே உயர்ந்த சட்டமாகும். இதைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
அரசியலமைப்பின் தேவை.
கீழே தரப்பட்டுள்ள காரணங்களுக்காக அரசியலமைப்பு தேவைப்படுகிறது.
1. அடிப்படை சட்டம் அரசாங்கத்திற்கு கடிவாளமாகும்.
2. தனி மனித உரிமையைப் பாதுகாக்கவும்.
3. சட்டத்தின் ஆட்சி நிலைக்கவும்.
4. குழப்ப நிலையிலிருந்து மீட்கவும்.
5. இறையாண்மை அதிகாரத்தை வரையறுக்கவும்.
6. நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததிகளின் விருப்பு வெறுப்புகளை கட்டுப்படுத்தவும்.
அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள்
1. நிர்வாக அமைப்பும், நிறுவனமும்.
2. அரசாங்க அங்கங்களின் செயல்பாடுகள், அதிகாரங்கள் மற்றும் இடையே உள்ள தொடர்புகள்
3. குடிமக்களின் அடிப்படை உரிமைகள்
4. மக்களுடன் அரசாங்கத்தின் உறவு
5. அரசியலமைப்பு திருத்தம் செய்யும் முறைகள்.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment