####அறிவோம்####
இந்திய அரசியலமைப்பின் முகவுரை
இந்திய அரசியலமைப்பின் முகவுரை
1. முகவுரை என்பது இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும்.
2. முகவுரை அரசியலமைப்பின் தொகுப்பாகவும் அதன் சாரமாகவும் உள்ளது.
3. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, பண்டித ஜவஹர்லால் நேருவால் டிசம்பர், 13 1946-ல் முன்மொழியப்பட்டு, ஜனவரி 22, 1947-இல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘குறிக்கோள் தீர்மானத்தை’ அடிப்படையாகக் கொண்டு எடுத்தாளப் பெற்ற ஒன்றாகும்.
4. இந்திய அரசியலமைப்பு முகவுரையைக் கொண்டே தொடங்குகிறது.
5. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டமே முதன் முதலில் முகப்புரையைக் கொண்டு தொடங்கியது.
முகப்புரை
1. இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம நெறி சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும்
2. சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும்,
3. சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையும், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும்,
4. தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும்,
5. உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிக்கும் உறுதியளிக்கும் உடன் பிறப்புணர்வை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி பூண்டு,
1949, நவம்பர் இருபத்து ஆறாம் நாளாகிய இன்று நம்முடைய அரசியலைப்புக் பேரவையில்,ஈங்கிதனால், இந்திய அரசியலமைப்பை ஏற்று, சட்டமாக இயற்றி, நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.
முகவுரையின் முக்கிய கலைச் சொற்கள்
1. Sovereign – இறையாண்மை – முழவதும் தன்னிச்சையாக செயல்படும் தன்மை, யாருக்கும் உட்படாத தன்மை; மேலும் இதற்கு மேல் உயர்ந்த அமைப்பு இல்லை.
2. Socialist – சமதர்மம் – இவ்வாசகம் 1976-ஆம் ஆண்டு 42-வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் வாயிலாக அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
3. Secular – மதச்சார்பின்மை – 42-ஆவது சட்டத் திருத்தம் (1976) மூலம் முகவுரையில் சேர்க்கப்பட்டது. (பிரிவு 25 – 28)
4. Democratic – மக்களாட்சி – மார்க்சியம் மற்றும் காந்திய சமதர்ம கொள்கைகளை கொண்டது.
5. Justice – நீதி – சமூக, பொருளாதார மற்றும் அரசியல் – நீதி
6. Liberty – உரிமை, சுதந்திரம் – சிந்தனை, சிந்தனை வெளிப்பாடு, நம்பிக்கை, பற்றார்வம் மற்றும் வழிபாடு
7. Equality – சமத்துவம் – தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில்
8. Fraternity – சகோததரத்துவம் – தனி ஒருவரின் மாண்பிற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும்.
முகவுரையின் முக்கியத்துவம்
* அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் எந்நோக்கத்திற்காக அதனை இயற்றினார்கள், அதன் மூலம் அடைய விரும்புகிற அரசியல், சமுதாய மற்றும் பொருளாதார சூழல்கள் பற்றிய குறிப்புகளை முகவுரை பகிர்கிறது.
யு. பால்கிவாலா- அரசியலமைப்பின் அடையாள அட்டை
மு.ஆ. முன்ஷி – நம் இறையாண்மையுடைய மக்களாட்சிக் குடியரசின் ஜாதகம்.
சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் – எங்கள் நீண்ட நாள் சிந்தமையும் கனவையும் உள்ளடக்கியது.
Popular posts from this blog
இலக்கண குறிப்பு தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வைக்கப்படும். • எழுத்து இலக்கணம் • சொல் இலக்கணம் • பொருள் இலக்கணம் • யாப்பு இலக்கணம் • அணி இலக்கணம் இலக்கண குறிப்பு : 1. நீரோசை ஆறாம் வேற்றுமைத் தொகை 2. பழகு, பாட்டு - வினைத்தொகை அரைத்திடும் சேனை - எதிர்காலப் பெயரெச்சம் வன்கானகம் - பண்புத்தொகை போந்து - வினையெச்சம் வன்தூறு - பண்புத்தொகை பறித்தமயிர் - பெயரெச்சம் நுண்டுளி - பண்புத்தொகை மென்குறள் - பண்புத்தொகை ஆடுக - வியங்கோள் வினைமுற்று தானதர்மம் - உம்மைத்தொகை அமைந்த, கொடுத்த - பெயரெச்சம் புதுக்குநாள் - வினைத்தொகை தண்கடல் - பண்புத்தொகை செங்கதிர் - பண்புத்தொகை காகிதப்பூ - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை புருவக்கொடி - உருவகம் இணையிலாப் பசுமை - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வான்மழை - ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை உதைத்த - பெயரெச்சம் கட்டும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம் நிழல் ...
வலஞ்சுழி எழுத்துகள் அ, எ, ஔ, ண, ஞ இடஞ்சுழி எழுத்துகள் ட, ய, ழ
காமராஜர் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்காக ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும் வகையில் அவருடைய பிறந்த நாளான ஜூலை மாதம் 15 ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக ஆக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த நாளில் ஆண்டுதோறும் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ-மாணவியர் புத்தாடை அணிந்து,விழா எடுத்து,காமராஜரின் படத்தை அலங்கரித்து,மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாணவ-மாணவியரிடையே பல்வேறு போட்டிகளையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திப் பரிசுகள் வழங்கி, ஊக்கமளித்துப் பெருந்தலைவர் காமராஜரின் புகழ்பாடும் வகையில் தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழா எழுச்சியுடன் கொண்டாடப்...
Comments
Post a Comment