####அறிவோம்####
பொது அறிவியல் * விடிவெள்ளி என்பது வீனஸ் கிரகத்தைக் குறிக்கிறது. * 'ஹாலி' வால் நட்சத்திரம் சூரியனை 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. * டர்பென்டைனில் மெழுகு இட்டால் கரைந்து போய் விடும். * பாதரசத்தில் இரும்பு மிதக்கும். * அமோனியாவின் மேல் பனிக்கட்டி வைத்தால் உருகாது. * சந்திர கிரகணம் நடைபெறுவது சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது. * நோபல் பரிசு கணிதத் துறைகள் வழங்கப்பதுடுதில்லை. * 'சுப்பர்சானிக் ஜெட்' என்பது ஒளியை விட வேகமாக செல்லும் விமானம். * முதன்முதலில் குளோனிங் முறையில் 'டோலி' என்ற ஆட்டுக்குட்டியை உருவாக்கியவர் 'இயன் வில்முத்'. * ராடான் வாயு இரும்பை விட கனமானது.
இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரிசர்வ் வங்கி भारतीय रिज़र्व बैंक Reserve Bank of India இந்திய ரிசர்வ் வங்கியின் முத்திரை மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமைச் செயலகம் தலைமையகம் மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா துவக்கம் ஏப்ரல் 1, 1935 ஆளுனர் உர்ஜித் பட்டேல் மத்திய வங்கி, இந்தியா நாணயம்,இந்திய ரூபாய் (₹) இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1935இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது. பொது மக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவது போல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமை (ஏஜன்ட்) ஏற்றுச் செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும். ரிசர்வ் வங்கியைப் பொது மக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொது மக்கள்
ஆழிப்பேரலை இந்து சமுத்திர சுனாமியால் அழிவிற்குட்பட்ட சென்னை மெரினா கடற்கரை சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை (Tsunami, ஜப்பானிய மொழி: 津 波 ட்சு னமி "துறைமுக அலை") என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும். சுனாமி சொல்லிலக்கணம் சுனாமி என்பது ஜப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனக் குறிப்பிடப்படுகிறது. சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை, கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும்
தமிழ்நாடு சட்டமன்றம் தமிழ்நாடு சட்டப் பேரவை தமிழ்நாடு சட்டப் பேரவை 15வது சட்டமன்றம் வகை தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஓரவை தலைமை சபாநாயகர் பி. தனபால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2016 முதல் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக 2016 முதல் முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி, அதிமுக 2016 முதல் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக 2016 முதல் அரசு கொறடா சு.ராஜேந்திரன் 2016 முதல் ஆளுங்கட்சி சட்டமன்றத் துணை தலைவர் ஒ. பன்னீர் செல்வம், அதிமுக 2016 முதல் கட்டமைப்பு இருக்கைகள் 235 அரசியல் குழுக்கள் அதிமுக+ (134) திமுக+ (98) தேர்தல்கள் வாக்களிப்பு முறைகள் First-past-the-post கடைசித் தேர்தல் 2016 கூடுமிடம் புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அல்லது தமிழ்நாடு சட்டமன்றம் இந்தியாவின் மாநிலமான தமிழ் நாட்டில்சட்டமியற்றும் அவையாகும். தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ளத் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ளது.
வார்தா கல்வித் திட்டம் வார்தா கல்வித் திட்டம் என்பது காந்தியடிகள் கருத்தில் தோன்றி அவரால் முன் வைக்கப்பட்ட கல்வித் திட்டம் ஆகும். 1937ஆம் ஆண்டு அக்டோபர் 22, 23 ஆகிய நாள்களில் மராட்டிய மாநிலத்தில் உள்ள வார்தா என்னும் ஊரில் காந்தியடிகள் தலைமையில் தேசியக் கல்வி மாநாடு கூடியது. அம்மாநாட்டில் இந்திய நாடு முழுக்க தொடக்கக் கல்வி முறையை மாற்றி அமைக்க டாக்டர் சாகிர் உசேன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு வார்தா கல்வித் திட்டம் என்று பெயர் கொடுக்கப்பட்டது. சிறப்பு அம்சங்கள் அந்தக் காலத்தில் இருந்த கல்வித் திட்டம் நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதாக இல்லை. எனவே தொடக்கக் கல்வி குறைந்த பட்சம் ஏழு வயது வரை விரிவுபடுத்தப்பட வேண்டும். அதில் பொது அறிவு, தாய் மொழிக் கல்வி, கைத்தொழில் ஆகியனவற்றைக் கற்பித்தல் வேண்டும். ஏட்டுப் படிப்போடு உடலுழைப்பும் தேவை என்றும் மதம் தொடர்பான கல்வி இடம்பெறாது என்றும் இத்திட்டத்தில் சொல்லப்பட்டன. இந்திய மாணவர்களை சிறந்த குடிமக்களாக ஆக்க இந்திய பண்பாட்டை அவர்களிடம் ஊட்ட வேண்டு
ஒத்துழையாமை இயக்கம் ஒத்துழையாமை இயக்கம் (Non-cooperation movement) என்பது பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமாகும். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மகாத்மா காந்தியாலும் இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட இவ்வியக்கம் செப்டம்பர் 1920 இல் தொடங்கி பெப்ரவரி 1922 வரை தொடர்ந்தது. லட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இந்தியர்கள் காலனிய அரசுடன் அனைத்து செயல்பாடுகளிலும் ஒத்துழைக்க மறுத்தனர். மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற செயல்கள் மூலம் அரசுக்கு ஓத்துழைப்பு தராமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அரசுப் போக்குவரத்து, பிரிட்டனில் தயாரி
அளவீடுகள் பன்னாட்டு அலகு முறை SI அலகு முறை கெல்வின் ( வெப்பநிலை ) மீட்டர் ( தொலைவு ) ஆம்பியர் ( மின்னோட்டம் ) வினாடி ( காலம் ) மோல் ( பொருள்களின் அளவு ) கிலோ கிராம் ( நிறை ) கேண்டிலா ( ஒளிச்செறிவு ) நீளம்: ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு நீளம் எனப்படும். நீளத்தின் அலகு " மீட்டர் " அதன் குறியீடு " மீ (m) " எனக் குறிப்பிடப்படுகிறது. நீளத்தின் அலகுகள் # 1 சென்டி மீட்டர் ( செ.மீ ) = 10 மில்லிமீட்டர் ( மி.மீ ) # 1 மீ ( மீட்டர் ) = 100 சென்டி மீட்டர் ( செ.மீ ) # 1 கிலோமீட்டர் = 1000 மீ ( மீட்டர் )
அறிவியல் 550 பவுண்ட் எடையை ஒரு வினாடியில் ஒரு அடி உயரம் நகர்வதற்கு தேவைபடும் சக்தியே ஒரு குதிரை சக்தி எனப்படும். ஆப்டிகல் பைபரில் பயன்படும் தத்துவம் முழு அக எதிரொளிப்பு. நாளொன்றிற்கு சுமார் 1,700 லிட்டர் ரத்தம் சிறுநீரகத்தின் வழியே வந்து திரும்புகிறது. இதில் சுமார் 1.5 லிட்டர் வடிநீர் கழிவுகளாக பிரித்தெடுக்கப்பட்டு சிறுநீராக வெளிவருகிறது. சிறுநீரகத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் சுமார் 1,200 மி.கி.ரத்தம் வருகிறது. 'மலேரியா' என்பது ஒரு இத்தாலியச் சொல். இதற்கு 'அசுத்தமான காற்று' என்று பொருள். ஆஸ்திரேலியாவில் 10 மீட்டர் நீளத்தில் ஒரு வாழைப்பழ சிலை வைக்கப்பட்டு உள்ளது. உலக வரலாற்றில் சீனாவில் 1876 முதல் 1879 வரையிலான ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சமே உலகின் கொடிய பஞ்சமாக அறியப்படுகிறது. இதில் ஏறத்தாழ 90 லட்சம் மக்கள் பலியானார்கள் என்று கணக்கிடப்பட்டது. மேரிகியூரி அம்மையாரின் வீடு ஒரே குடும்பத்தில் 4 பேர் நோபல் பரிசு வென்ற சாதனைக் குடும்பமாக விளங்குகிறது. மண்ணில் குளோரைடு கலத்திருந்தால் நீர் சுவைக்கும்.ஆனால் சுத்தமான நீர் என்றால் சுவையே இருக்காது. தண்ணீருக்கு அதில் கல
இந்தியத் தேசிய இராணுவம் இந்தியத் தேசிய இராணுவம் செயற் காலம் August 1942 – September 1945 நாடு வார்ப்புரு:நாட்டுத் தகவல் Azad Hind பொறுப்பு கரந்தடிப் போர் முறை, காலாட் படை, special operations அளவு 43,000 (approximate) குறிக்கோள் Ittehad, Itmad aur Qurbani (Unity, Faith and Sacrifice in Urdu) அணிவகுப்பு Kadam Kadam Badaye Ja சண்டைகள் இரண்டாம் உலகப் போர் Burma Campaign Battle of Ngakyedauk இம்பால் சண்டை கோஹிமா யுத்தம் Battle of Pokoku Battle of Central Burma தளபதிகள் Ceremonial chief சுபாஷ் சந்திர போஸ் இந்தியத் தேசிய இராணுவம் (Indian National Army – INA) என்பது இரண்டம் உலகப் போரின் போது பிரித்தானிய இந்திய அரசினை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு படை. இது சப்பானியப் பேரரசின் உதவியுடன் இந்தியாவின் காலனிய அரசை எதிர்த்துப் போரிட்டது. ஆரம்ப காலத்தில் சப்பானியர்களால் கைது செய்யப்பட்ட பிரித்தானிய இந்திய இராணுவத்தின் இந்திய போர்க்கைதிகள் இதில் இ
கிலாபத் இயக்கம் கிலாபத் இயக்கம் அல்லது கிலாஃபட் இயக்கம் 1919-1924 காலகட்டத்தில் பிரித்தானிய இந்தியாவின்முசுலிம்களால் உதுமானிய கலீபகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஓர் இயக்கம். முதலாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு ஆதரவாகப் போரிட்ட உதுமானியக் கலீபகம், போரில் ஏற்பட்ட தோல்வியினால் அழியும் நிலைக்கு ஆளானது. வெற்றி பெற்ற நேச நாடுகள் உதுமானியக் கலீபகத்தைப் பிரிவினை செய்து கலீபாவின் அதிகாரத்தை அழிக்க முடிவு செய்தனர். கலீபாவினை தங்கள் சமய அதிகாரத்தின் சின்னமாகக் கருதிய உலக முசுலீம்களிடையே இது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. கலீபகத்தைப் பாதுகாக்க அலி சகோதரர்கள் என அழைக்கப்பட்ட முகமது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் 1919ம் ஆண்டு இந்தியாவில் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர். விரைவில் கிலாபத் இயக்கம் இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. ஒட்டோமானிய கலீபகத்தைப் பாதுகாக்கும்படி பிரித்தானிய அரசை வலியுறுத்தியது. காங்கிரசு அப்போது துவங்கியிருந்த ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டது. ஒத்துழையாமை இயக்கத்துக்கு இந்திய முசு