####அறிவோம்####
பிரபலமானவர்கள் FAMOUS PERSONALITIES 1 VIDEO LINK : https://youtu.be/BC_wbUrUvuI
நடப்பு நிகழ்வுகள் - CURRENT AFFAIRS இந்தியா முதல்மந்திரி பெயரில் புதிய மாம்பழ வகை !! உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் 2 நாள் மாம்பழ கண்காட்சியினை முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 700 வகை மாம்பழங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே அதிக அளவில் மாம்பழங்களை விளைவிக்கும் மாநிலம் உத்தரப்பிரதேசம் என பெருமிதம் தெரிவித்தார். விவசாயிகளின் வருவாய் மற்றும் தேவைகளை இரு மடங்காக உயர்த்த தோட்டக்கலை உதவும் எனவும், இந்த கண்காட்சி அதற்கான முயற்சியாக நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கண்காட்சியில் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்தை கவுரவிக்கும் விதமாக உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் விளையும் மாம்பழ வகைக்கு ‘யோகி மாம்பழம்’ என பெயர் சூட்டப்பட்டது. மஹாராஜா டேரக்ட் என்ற புதிய சேவையைத் தொடங்கியது ஏர் இந்தியா ஏர் இந்தியா நிறுவனம், மஹாராஜா டேரக்ட் (MaharajahDirect) என்ற புதிய பன்னாட்டு போக்குவரத்து சேவையை தொடங்கி உள்ளது. சொகுசு இருக்கைகள், பணியாளர்களுக்கு புதிய சீருடைகள்...
நடப்பு நிகழ்வுகள் CURRENT AFFAIRS இந்தியா ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் ரூ. 2 ஆயிரம்; குப்பையை வீசினால் ரூ. 500 அபராதம் : ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் ரூ. 2 ஆயிரம்; குப்பையை வீசினால் ரூ. 500 இன்று முதல் அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. ரயில்களில் நின்று கொண்டும், ரயில் நிலையங்களில் ரயில் செல்லும் போதும் செல்பி எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சிலர் பாலங்களில் ரயில் செல்லும் போதும், ரயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் செல்பி எடுக்கின்றனர். இதனால், அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தண்டவாளத்தை கடக்கும்போது, ரயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்கும்போது, ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதையடுத்து ரயில் நிலையங்கள், ரயில் நிலைய வளாகம், ரயில்வே நடைமேடை, ரயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மீறி செல்பி எடுப்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ரயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டிய...
நடப்பு நிகழ்வுகள் CURRENT AFFAIRS 21/06/2018 இந்தியா ராஜஸ்தானில் ஒரே நேரத்தில் 1.05 லட்சம் பேர் யோகா செய்து கின்னஸ் சாதனை!! உலக யோகா தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தானில் நடந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 1.05 லட்சம் பேர் இணைந்து யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-வது வருடமாக இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில், அம்மாநில முதல்மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவும், யோகா பயிற்சியாளாரான ராம்தேவ் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.05 லட்சம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் அதிகம் பேர் ஒன்றிணைந்து யோகா பயிற்சி மேற்கொண்ட இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. கொல்கத்தா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் உதவியாளராக திருநங்கை: ...