####அறிவோம்####
இந்திய அரசியலமைப்பின் முகவுரை 1. முகவுரை என்பது இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும். 2. முகவுரை அரசியலமைப்பின் தொகுப்பாகவும் அதன் சாரமாகவும் உள்ளது. 3. இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, பண்டித ஜவஹர்லால் நேருவால் டிசம்பர், 13 1946-ல் முன்மொழியப்பட்டு, ஜனவரி 22, 1947-இல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘குறிக்கோள் தீர்மானத்தை’ அடிப்படையாகக் கொண்டு எடுத்தாளப் பெற்ற ஒன்றாகும். 4. இந்திய அரசியலமைப்பு முகவுரையைக் கொண்டே தொடங்குகிறது. 5. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டமே முதன் முதலில் முகப்புரையைக் கொண்டு தொடங்கியது. முகப்புரை 1. இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த, சமதர்ம நெறி சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் 2. சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும், 3. சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையும், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும், 4. தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும், 5. உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்க
அரசியலமைப்பு உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அரசியலமைப்பை பெற்றிருக்க வேண்டும் அரசியல் அமைப்பின்றி ஒரு நாட்டினை ஆட்சி செய்வது இயலாத காரியம். ஒரு சில விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் பல நாடுகளில் இருந்திருக்கின்றன என்பதனை வரலாறு மூலம் நாம அறிகிறோம். சீரான அமைதியான நாட்டினை உருவாக்க இவைகள் வேண்டும் என்பது தெரியவருகிறது. குழப்பமின்றி சிறப்பாக ஆட்சி செய்ய அரசியலமைப்பு இன்றியமையாதது. ஜனநாயக நாடு அல்லது சர்வாதிகார நாடாக இருந்தாலும் அதை நிர்ணயிக்க ஒரு சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை ஒவ்வொரு நாடும் ஏற்றுக் கொள்கிறது. தற்பொழுது விதிமுறைகள் எல்லாம் அரசியலமைப்பு என்ற அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் அறிதல் வேண்டும். அரசியலமைப்பின் பொருளும் விளக்கமும் ஒரு நல்ல அரசாங்கத்தின் அமைப்பும் அதன் அதிகாரமும் அரசியலமைப்பின் நிலையை உணர்த்துவதாக அமையும். நற்குடிமகனின் உரிமைகளும், கடமைகளும் அரசியலமைப்பை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் ஆவணம் என அரசியலமைப்பை கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. அரசியலமைப்பு என்பது எ
இந்திய அரசியலமைப்பு 1. அமைச்சரவை செயலகத்தின் முக்கிய பிரிவுகள் யாவை? குடிமைப்பிரிவு, இராணுவப்பிரிவு, நுண்ணறிவுப்பிரிவு. 2. மாநில கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு? 1964. 3. ஒவ்வொரு தனிமனிதனின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நீதிப்பேராணை எது? ஆட்கொணர்வு நீதிப்பேராணை. 4. துணை நீதிமன்றங்களின் பணி என்ன? உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை பரிசீலித்து. 5. இந்திய குடியுரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு? 1955. 6. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைப்பவர் யார்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. 7. இந்திய அரசியலமைப்பில் எந்த பாகத்தில் இந்திய குடியரசுத்தலைவரின் நெருக்கடிக்கால அதிகாரங்கள் குறிப்பிடப்பற்றுள்ளன? XVIII. 8. நிலைக்குழுக்கள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிதாக உருவாக்கப்படும்? ஒவ்வொரு ஆண்டும். 9. நாடாளுமன்ற தலைமைச்செயலகத்தின் நிர்வாகத்தலைவர் யார்? சபாநாயகர். 10. கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மாநிலங்களவை எத்தனை தனித்துவமான அதிகாரங்களை பெற்றுள்ளது? இரண்டு.
சிந்து சமவெளி நாகரிகம் சில குறிப்புகள் 1.சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு? 1921. 2.மனித இனம் முதன் முதலில் தோன்றியதாக கருதப்படும் இடம்? இலெமுரியா. 3.ஏழு நதிகள் பாயும் நிலத்தின் பெயர்? சப்த சிந்து. 4.இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் தந்தை? அலெக்ஸாண்டர் கன்னிங்காம். 5.இந்திய நாகரிகத்தின் தொடக்க காலம்? சிந்து சமவெளி நாகரிகம். 6.சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாத உலோகம்? இரும்பு. 7.சிந்து சமவெளி மக்கள் எழுத்து முறை? சிந்துர எழுத்து முறை. 8.எழுதும் முறை? வலமிருந்து இடமாகவும், இரண்டாம் வரி இடமிருந்து வலமாகவும் எழுதப்பட்டது. 9.உலகத்திலேயே சிந்து சமவெளியில் தான் பருத்தி முதன் முதலில் பயிரிடப்பட்டது. 10.பருத்திக்கு கிரேக்க மொழியில் சிந்தோன் என்று பெயர்.