####அறிவோம்####
அறிவியல் விதிகள் நியூட்டன் விதிகள் முதல் விதி : ஓய்வு நிலையில் இருக்கும் ஒரு பொருளின் மீது விசை செயல்படாதவரை அது ஓய்வு நிலையிலையே இருக்கும். இதே போன்று இயக்கத்திலுள்ள ஒரு பொருள் தொடர்ந்து இயக்க நிலையிலேயே இருக்கும். இரண்டாம் விதி : இயங்குகின்ற ஒரு பொருளின் உந்த மாறுபட்டு வீதம் அதன் மீது செலுத்தப்படும் நேர் விகிதத்தில் இருப்பதுடன் விசை செயல்படும் திசையிலேயே இருக்கும். மூன்றாம் விதி : ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
பொதுத் தமிழ் ஆறாம் வகுப்பு வாழ்த்து திருவருட்பா 1. திருவருட்பாவை எழுதியவர்? இராமலிங்க அடிகளார் 2. சிறப்பு பெயர்? திருவருட்பிரகாச வள்ளலார் 3. பிறப்பிடம்? கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தார் 4. பெற்றோர்? இராமையா - சின்னம்மையார் 5. வாழ்ந்த காலம்? 05/10/1823 - 30/01/1874 6. எழுதிய நூல்கள் ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம். 7. பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது? அறச்சாலை. 8. அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது? ஞானசபை. 9. சமர சன்மார்க்க நெறிகளை வழங்கினார். 10. இவர் பாடிய பாடலின் தொகுப்பு திருவருட்பா. 11. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர். 12. வள்ளலார் பாட்டை மருட்பா என்று அழைத்தவர்? ஆறுமுக நாவலர்.
பொது அறிவு வினா - விடைகள் 1.தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்? ஆலோசனை வழங்குபவர் 2.”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்? அந்தமான் நிக்கோபார் 3.எந்த ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது? 1978 4.பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ____________ ஆகும்? சேமிப்பு 5.எது இடையீட்டுக் கருவியாக செயல்படுகிறது? பணம் 6.ஆண்டுதோறும் எந்த மாதத்தின் முதல் வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது? ஜனவரி 7.கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்? கிரேஸ் கோப்பர் 8.இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உப்பு நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமைந்துள்ள இடம்?
பொது அறிவு வினா - விடைகள் 1.பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்? ஏ.ஜே.கார்னரின் 2.இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்? இளவரசர் பிலிப் 3.சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்? அவாமி முஸ்லிம் லீக் 4.2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்? ரெயில்வே மந்திரி 5.பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்? லஸ்கர்-இ-தொய்பா 6.இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்? ஆலம் ஆரா (1931) 7.செஞ்சிக் கோட்டை எந்த துறையால் பாதுகாக்கப்படுகிறது? தொல் பொருள் ஆய்வுத் துறை 8.புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்? புற்றுநோய் 9.புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது? புகையிலை 10.காமராசர் பிறந்த ஆண்டு?
மொழிவாரி மாநிலம் உருவாக்க கமிட்டி மொழிவாரி மாநிலம் அமைக்க ஏற்படுத்தப்பட்ட முதல் கமிட்டி ஏஸ்.கே. தார் கமிட்டி. இது 1948 நவம்பரில் அமைக்கப்பட்டது. இது மொழிவாரியாக மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து 1948ஆம் ஆண்டு இறுதியில் ஜெ.வி.பி கமிட்டி அமைக்கப்பட்டது. ஜெ.வி.பி என்பது ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், பட்டாபி சீத்தராமலு ஆகியோரின் முதல் எழுத்துக்கள் சுருக்கமாகும். இக்கமிட்டியும் மொழிவாரி மாநிலங்கள் அமைக்க ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தனி ஆந்திர மாநிலம் உருவாக்க கோரி போராடிய பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் மரணமடைந்ததால் ஏற்பட்ட பதற்றத்தை தனிக்க ஆகஸ்ட் 1, 1953இல் ஆந்திர மாநிலம் உருவாகியது. மொழிவாரிய பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் ஆந்திர மாநிலம். ஆந்திராவை தொடர்ந்து பிற மாநிலங்களை மொழிவாரியாக பிரிக்க மாநில மறுசீரமைப்பு கமிட்டி 1953இல் டிசம்பர் 22இல் பாசில் அலி தலைமையில் தொடங்கப்பட்டது. இதன் இரு உறுப்பினர்கள் எச்.என்.குன்ஸ்ரு மற்றும் கே.என்.பணிக்கர். இது 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க இந்தியாவை பரிந்துரை செய்தது. இதையடுத்து மாநில மறுசீரமைப்பு சட்டம்
புவியியல் வினா விடை 1. ஓர் ஒளியாண்டின் தூரம் ஏறக்குறைய? 9460 பில்லியன் கி.மீ 2. சூரியன் ஒளி புவியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம்? 8.3 நிமிடங்கள். 3. நமது சூரியக் குடும்பத்திற்கு அருகில் உள்ள நட்சத்திரம்? பிராக்சிமா செண்டாரி. 4. புவிக்கு பிராக்சிமா செண்டரிக்கும் உள்ள இடத் தூரம்? 4.3 ஒளியாண்டு. 5. சூரியனின் மேற்பரப்பில் வெப்ப நிலை? 6000 டிகிரி செல்சியஸ். 6. சூரியனின் மையப் பகுதி வெப்பநிலை? 15,000,000 டிகிரி செல்சியஸ். 7. சூரியனில் அதிகமாக உள்ள வாயு? ஹைட்ரஜன். 8. சூரியனில் ஹைட்ரஜன் எரிந்து? ஹீலியமாக மாற்றப்படுகிறது. 9. சூரியனில் ஒரு வினாடிக்கு எரியும் நைட்ரஜனின் அளவு? 700 மில்லியன் டன். 10. சூரியன் ஒரு? நடுவயதுடைய நட்சத்திரம். 11. ஹைலே வால் நட்சத்திரம் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை காணமுடியும்? 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை. 12. தற்போது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கை? 8. 13. சூரிய குடும்பம் என்பது? கோள்கள் மற்றும் துணைக் கோள்கள் மற்றும
இந்தியன் ரயில்வே மற்றும் மண்டலங்கள்
பழமொழிகள் அச்சம் 1. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். 2. மடியிலே கனமிருந்தால் வழியிலே பயம். 3. முதுகிலே புண் உண்டானால் செடியிலே நுழையப் பயம். 4. மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டை இடிப்பார்களா. 5. அச்சமற்றவன் அம்பலமேறுவான். 6. அடிக்கிற காற்றுக்கும், பெய்கிற மழைக்கும் பயப்படு. 7. இடிக்கொம்புக்காரன் கோழிக்குஞ்சுச் சத்தத்திற்கு அஞ்சுவன. 8. என்றும் பயப்படுதலிலும் எதிரே போதல் உத்தமம். 9. கரடி கையிலுதைபட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டால் பயம். 10. நயத்திலாகிறது பயத்திலாகாது. 11. பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு முட்டாமல் விடுகிறதா. 12. கள்ளன் அச்சம் காடு கொள்ளாது. 13. கிலி பிடித்ததோ, புலி பிடித்ததே. 14. அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறன். 15. விழுந்தவன் சிரித்தான் வெட்கத்திற்கஞ்சி.
நீர்நிலைகள் வகைகள் Types of water bodies